Spam இமெயில் தொல்லை தாங்க முடியவில்லையா? இப்படி செய்தால் போதும்!
உங்கள் மின்னஞ்சலில் தேவையற்ற இமெயில்கள், ஸ்பேம், விளம்பர இமெயில்கள் வராமல் தடுக்கும் எளிய வழிமுறைகளை இங்குக் காணலம். இதன் மூலம் தேவையில்லாத மெயில் தொல்லைகளில் இருந்து தப்பிக்கலாம்.
முன்பின் தெரியாதவர்கள், நிறுவனங்களிடம் இருந்து ஸ்பேம் இமெயில், தேவையற்ற அல்லது விரும்பத்தகாத மின்னஞ்சல்கள் வருவது என்பது பொதுவாக அனைவருக்கும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடியது. அவை உடனடியாக அழிக்கப்பட வேண்டும். இல்லையெனில், நமது மெயில் மெமரியை ஆக்கிரமிப்பது மட்டுமில்லாமல், உங்கள் டிவைஸ் மற்றும் டேட்டாவுக்கு தீங்கும் விளைவிக்கலாம்.
அந்தவகையில், ஸ்பேம் இமெயில்களை தடுப்பது குறித்து இங்கு பார்க்கலாம்:
விளம்பர மெயிலில் இருக்கும் Unsubscribe என்ற பொத்தானைத் தட்டவும். Unsubscribe என்ற பட்டனானது பெரும்பாலும் மின்னஞ்சலின் மேல் அல்லது கீழ் இருக்கும்.
மார்க்கெட்டிங் நிறுவனங்கள், இணையதளங்களில் நீங்கள் உங்கள் மின்னஞ்சலை கொடுக்க வேண்டாம். மின்புத்தகத்தைப் இலவமாக பதிவிறக்கம் செய்ய, அல்லது டிரையல் வெர்ஷனுக்கான கணக்கைத் தொடங்க போன்றவற்றிற்கு என பிரத்யேகமாக டம்மி மின்னஞ்சல் ஒன்றை உருவாக்கி கொள்ளுங்கள். அந்த மின்னஞ்சல் மூலமாக மேற்கண்ட பணிகளை மேற்கொள்ளலாம், வேறு ஏதேனும் இணையதளங்களில் மின்னஞ்சல் கேட்டால் கூட, இந்த டம்மி இமெயிலை கொடுக்கலாம்.
மேலும் செய்திகளுக்கு..Realme C33: 9 ஆயிரம் பட்ஜெட்டில் வெளியான ரியல்மி ஸ்மார்ட் போன்..!
உங்கள் இமெயில் ஐடியை அனைவருக்கும் தெரியும் வகையில் பொதுவில் வைக்கப்படக்கூடாது. நீங்கள் நம்பக்கூடிய நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் மட்டுமே உங்கள் இமெயில் ஐடியை வழங்கவும். உங்கள் மின்னஞ்சலை ஆன்லைனில் இல்லாமல் இருந்தால், ஸ்பேமர்கள் மற்றும் ஃபிஷர்களால் ஏற்படும் மோசடி மின்னஞ்சல் வருவதை தடுக்கலாம்.
தேவையில்லாத மின்னஞ்சலில் ‘ஸ்பேம்’ எனக் குறிக்கவும். இதன் மூலம் உங்கள் மின்னஞ்சலின் தானியங்கி ஸ்பேம் வடிப்பான் ஸ்பேம் மின்னஞ்சல்களை அடையாளம் கண்டு அவற்றை வடிகட்டுவதை அறிய முடியும்.
சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்பேமர்கள் டிராக்கிங் பிக்சல்கள் கொண்ட மின்னஞ்சல்கள் கூட உங்களுக்கு அனுப்பலாம். அவைகள் நீங்கள் இமெயில் செய்யும் கணினி திரையை கூட அப்படியே படம் பிடித்து, எதிர்முனையில் உள்ள ஹேக்கர்களுக்கு அனுப்பி வைக்கும் அபாயம் உள்ளது.
குறிப்பு: ஸ்பேம் எனப் புகாரளி என்பதைக் கிளிக் செய்யும்போது அல்லது நீங்களாகவே மின்னஞ்சலை ஸ்பேம் ஃபோல்டருக்கு நகர்த்தும்போது அந்த மின்னஞ்சலின் நகல் Googleளுக்கு அனுப்பப்படும். அத்துடன் ஸ்பேம் மற்றும் தவறான பயன்பாட்டிலிருந்து பயனர்களைப் பாதுகாக்க அதைப் பகுப்பாய்வு செய்யக்கூடும்.
மேலும் செய்திகளுக்கு..APPLE WATCH: 89 ஆயிரத்திற்கு வாட்ச் அறிமுகம் செய்த ஆப்பிள்!!
மின்னஞ்சலின் ஸ்பேம் லேபிளை அகற்றுதல்:
நீங்கள் ஒரு மின்னஞ்சலை தவறாக ஸ்பேம் எனக் குறித்தால் அதை ஸ்பேம் ஃபோல்டரில் இருந்தும் அகற்ற முடியும். இதற்கு,
1. கம்ப்யூட்டரில் Gmail திறக்கவும்.
2. இடதுபுறத்தில், ‘மேலும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. ‘ஸ்பேம்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
4. தொடர்புடைய மின்னஞ்சலைத் திறக்கவும்.
5. மின்னஞ்சலின் மேலே உள்ள, ‘ஸ்பேம் இல்லை’ என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் செய்திகளுக்கு..WhatsApp-ல் இனி ஸ்கோரல் செய்து மெசேஜ்களைப் பார்க்கத் தேவையில்லை.. வரப் போகிறது புதிய அப்டேட்!