APPLE WATCH: 89 ஆயிரத்திற்கு வாட்ச் அறிமுகம் செய்த ஆப்பிள்!!

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டு விழாவில் அதன் இணை வெளியீடுகளாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் வாட்ச் SE என 3 புது மாடல்களில் ஐ வாட்ச் வெளியிடப்பட்டுள்ளது. 

apple launches watch series 8 at rs 46k watch ultra at rs 90k watch se at rs 30k

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ் வெளியீட்டு விழாவில் அதன் இணை வெளியீடுகளாக ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா மற்றும் வாட்ச் SE என 3 புது மாடல்களில் ஐ வாட்ச் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது புதிய படைப்பான ஐபோன் 14 சீரிசை வெளியிட்டுள்ளது. அந்த விழாவில் அதன் இணை வெளியீடாக வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் ஐவாட்ச் சீரிஸ்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு உலகம் முழுவதும் ஐவாட்ச் அணிந்தவர்கள் எப்படியெல்லாம் அவர்களது உயிர் காப்பாற்றப்பட்டது என்பது குறித்து வாடிக்கையாளர்களின் அனுபவங்களை ஒரு ஆவண வடிவில் ஆப்பிள் நிறுவனம் திரையிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் புனது புதிய ஐவாட்சான ஆப்பிள் ஐவாட்ச் 8 ஐ அறிமுகம் செய்தது. முந்தைய ஐவாட்சான ஆப்பிள் ஐவாட்ச் 8 ஐ அறிமுகம் செய்தது. முந்தைய ஐவாட்ச் சீரிசை ஒத்த அம்சங்களே ஐவாட்ச்  8ல் இருந்தாலும் கூடுதலாக இரண்டு புதிய முக்கியமான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்திருக்கிறது.

இதையும் படிங்க: இனி பிளிப்கார்ட் மூலமாகவே ஹோட்டல் புக் செய்யலாம்!!

உடல் வெப்பநிலை சென்சாரும், பீரியட் ட்ராக்கும் உள்ளடக்கியிருக்கிறது. அதன்படி TEMPERATURE SENSOR மூலம் உடலில் நடக்கும் சிறிய அளவிலான வெப்பநிலை மாற்றங்களையும் கணக்கிட முடியும் எனக் கூறப்பட்டிருக்கிறது. அதே போன்று பெண்கள் தங்களுடைய மாதவிடாய் மற்றும் கருவுறும் நாட்களை கணக்கிட்டுக் கொள்ள PERIOD PREDICTION அம்சமும் உள்ளது. இதன் மூலம் மாதவிடாய் நாட்களை எளிதில் கணக்கில் கொள்ள முடியும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் ஐவாட்ச் 8ல் CRASH DETECTION என்ற புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்ட உடனே அதன் அதிர்வுகளைக் கொண்டு EMERGENCY CONTACT ல் உள்ளவர்களை தொடர்புகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் LOW POWER MODE வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 18 மணி நேரமாக இருந்த ஐவாட்சின் பேட்டரி பவஃர் 36 மணி நேரம் வரை உபயோகிக்க முடியும். இதன் விலை ரூ.45,900 என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: iPhone 14 போனுக்குப் போட்டியாக களமிறங்கும் Pixel 7

விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள் போன்றவர்களை மையப்படுத்தி ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்சில் 2000 NIT BRIGHTNESS, NIGHT  VIEW போன்ற அம்சங்கள் இருக்கிறது. இதுபோக திடீரென ஒரு பகுதியில் சிக்கிக் கொண்டால் அதனை உடனடியாக அருகில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் SIREN SIGNAL என்ற அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. டிரக்கிங் சென்றுவிட்டு திரும்பும் போது வந்த பாதை மறந்துவிட்டால் GPSஐ பயன்படுத்தி இதில் கொடுக்கப்பட்ட BACK TRACK மூலம் சென்றடையலாம். மேலும் 20 - 55 டிகிரி சூழலில் வேலை செய்யும் வகையிலும் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. ஐவோட்ச் 8 போல 36 மணி நேரம் பேட்டரி லைப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.29,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios