சாம்சங் நிறுவனம் பல வார முன்னோட்டத்துக்குப் பிறகு, இந்திய சந்தையில் கேலக்ஸி ஆன் 6 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஜூலை 5ஆம் தேதி முதல் ஃபிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும் இந்த கேலக்ஸி ஆன் 6 ஸ்மார்ட்போன், கருப்பு மற்றும் நீல நிறங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்து கொள்ளும் வசதியும் இருப்பதாக கூறியுள்ள சாம்சங் நிறுவனம், இதர கட்டணமில்லாமல் ரூ.1,610 என்ற மாத இ.எம்.ஐ.யில் கேலக்ஸி ஆன் 6ஐ வாங்கலாம் என்று அறிவித்துள்ளது.இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ஜியோ இணைப்பையும் சேர்த்து வாங்கினால், ரூ.2,750 கேஷ் பேக் ஆஃபர் இருப்பதாகவும் ரூ.198க்கு ரீசார்ஜ் செய்யும் முதல் 4 ரீசார்ஜுகளுக்கு இரட்டை இண்டர்நெட் டேட்டா வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ள சாம்சங் கேலக்ஸி ஆன் 6, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன், 5.6 இன்ச் எச்.டி. பிளஸ் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே மற்றும் 18:5:9 என்ற திரை கோணத்தையும் பெற்றுள்ளது. 1.6 ஆக்டோ-கோர் பிராசசர், 8 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா, 13 மெகா பிக்ஸல் பின்புற கேமராவுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மெமரியையும் கொண்டுள்ளது.முகத்தை அடையாளம் கண்டு திறக்கும் பேஸ் அன்லாக் முறையை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 4ஜி வோல்டி, வைஃபை, ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக் வசதி கொண்டது என்றும், 3000 எம்.ஏ.எச். பேட்டரியை கொண்டது என்றும் கூறப்படுகிறது. டூயல் நானோ சிம் வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஆன் 6 பாஸ்ட் சார்ஜிங் வசதியும் பெற்றுள்ளதாம்.    இ.எம்.ஐ இல்லாமல் ரெடி கேஷ் கொடுத்து வாங்க வேண்டும் என்றால் சாம்சங் கேலக்சி ஆன் 6க்கு நீங்கள் 14.490க்கு வாங்கலாம். ஒரு மாதம் கழித்து என்றால் கூடுதலாக ரூபாய் 1000 கொடுக்க வேண்டியிருக்கும்.