சாம்சங் Galaxy A51 மற்றும் A71 சூப்பரான அம்சங்கள், டாப் கிளாஸ் பிரைவசி, கண்கவர் கலர்கள்
வேறு எந்த ஸ்மார்ட்ஃபோன்களிலும் இல்லாத பேக்கேஜ் – நீடித்து நிலைக்கும் பேட்டரி, ஸ்டன்னிங் டிஸ்ப்ளே, உயர்தரம் வாய்ந்த கேமராக்கள், மிகச்சிறந்த பிரைவசி அம்சங்கள்.
செல்ஃபிக்கள் எடுப்பது நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. அதை நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம், சமூக வலைதளங்களில் பதிவிடலாம் அல்லது நீங்களே வைத்துக்கொள்ளலாம். எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும்.. அந்த ஃபோட்டோக்களை வெளிநபர்கள் பார்க்க நேர்ந்தால் நீங்கள் அசவுகரியமாக உணர்வீர்கள் அல்லவா? நீங்கள் ஸ்க்ரீனை பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்து வைத்திருந்தாலும், பாஸ்வேர்டை கேட்டால் உங்களால் எப்படி மறுக்க முடியும்?
உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு பகிர்வதற்காக மட்டுமே ஸ்க்ரீன்ஷாட் வைத்திருகிறீர்கள் என்றால், அந்நேரத்தில் உங்கள் அம்மா வேறு யாருக்காவது கால் செய்ய வேண்டும் என்று ஃபோனை கேட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
இதுமாதிரியான சூழல்களில் உங்கள் பிரைவசியை பாதுகாத்து, சுதந்திரம் அளிக்கும் விதமாக, உங்கள் பிரைவசி கவலையை தீர்த்து வைக்கிறது Alt Z Life தொழில்நுட்பம்.
Alt Z Life:
நமது ஃபோனை மற்றவரிடம் கொடுக்க முடியாத சூழலை எதிர்கொண்டிருப்போம். சில நேரங்களில் உங்கள் ஃபோனை நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கொடுத்தே ஆக வேண்டிய சூழல் வரும்போது, நமது பிரைவசி ஃபோட்டோக்களை பார்த்துவிடுவார்களோ என்ற கவலை இருந்திருக்கும்.
உங்களது அந்த கவலைகளை போக்கி, பிரைவசியை பாதுகாக்க, Quick Switch மற்றும் Intelligent Content Suggestions ஆகிய வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது சாம்சங். மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, உங்கள் ஸ்மார்ட்ஃபோன்களை யாரிடம் வேண்டுமானாலும் பயமில்லாமல் பகிரும் வகையில் ஸ்மார்ட்ஃபோனை உருவாக்கியுள்ளது சாம்சங்.
குயிக் ஸ்விட்ச் ஆப்சனில் பவர் பட்டனை டபுள் கிள்க் செய்து பிரைவேட் மோடிலிருந்து உடனடியாக பப்ளிக் மோடிற்கு மாற்றிவிடலாம். அதன்மூலம் உங்களது கேலரி, ப்ரௌசர், வாட்ஸ் ஆப் ஆகியவற்றின் பிரைவசியை பாதுகாக்க முடியும். நீங்கள் அலுவலகத்தில் உங்கள் நண்பரிடம் ஃபோட்டோக்களை காட்டிக்கொண்டிருக்கும்போது, உங்கள் பாஸ் வந்துவிட்டால் என்றால், உங்கள் பாஸ் அதை பார்த்துவிடாமல் பாதுகாப்பது எப்படி? நீங்கள் அப்போது என்ன செய்வீர்கள்?
இந்த வீடியோவில் ராதிகா மதன் எப்படி அவரது பாஸிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்று பாருங்க..
Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களில் எப்படி குயிக் ஸ்விட்ச் வசதியை ஆக்டிவேட் செய்வது என்பதை இந்த வீடியோவில் பாருங்கள்.
Intelligent Content Suggestionsல் 'On Device AI' வசதியின் மூலம் உங்களது புகைப்படங்களை பிரைவேட் மோடில் போட்டு பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும். நீங்கள் பிரைவசியாக வைத்திருக்க விரும்பும் புகைப்படங்களை பிரைவேட் கேலரியில் வைத்துக்கொள்ளலாம். பிரைவேட்டாக வைக்க விரும்பும் முகங்கள் மற்றும் புகைப்படங்களை பிரைவேட் டேக் போட்டு பாதுகாத்துக்கொள்ளலாம். இந்த வசதியை எப்படி ஆக்டிவேட் செய்வது என்று பாருங்கள்.
Camera Flagship Features:
சாம்சங் Galaxy A51 மற்றும் A71 மொபைல்கள் பிரைவசி சிறப்பம்சங்கள் மட்டுமல்லாது சிறந்த ஃபோட்டோ அனுபவத்தை வழங்கும் மொபைல்கள். quad-camera செட்டப் உங்களுக்கு மிகச்சிறந்த, வண்ணமயமான ஃபோட்டோ அனுபவத்தை வழங்கும். வெளிச்சமான இடமோ அல்லது வெளிச்சம் குறைவான மங்கலான இடமோ எப்படிப்பட்ட வெளிச்சத்திலும் உங்களுக்கு மிகச்சிறந்த ஃபோட்டோக்களை வழங்கும். அந்த ஃபோட்டோக்களை பதிவிட்டால் உங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழுக்க முழுக்க நேர்மறையான கருத்துகளும் பாராட்டுக்களும் குவியும்..
சரியான ஃப்ரேம் செட் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை; நீங்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படவே தேவையில்லை. ஒரே டேக்கில் அருமையான ஃபோட்டோக்களை பெற முடியும். நீங்கள் ஃபோட்டோ எடுக்கும்போது உங்கள் நண்பர்கள் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது டென்னிஸ் போன்ற வேகமான நகர்தலை கொண்ட போட்டிகளையோ நீங்கள் ஃபோட்டோ எடுக்க விரும்பினால் கேமரா அப்ளிகேஷனை ஆன் செய்தால் போதும். 7 ஃபோட்டோக்கள் மற்றும் 3 வீடியோக்களை உங்களால் பெற முடியும்.
Night Hyperlapse, Smart Selfie Angle, Quick Video, Custom Filter, Switch Camera(ரெக்கார்ட் செய்யும்போது), AI Gallery Zoom ஆகிய பல பிரத்யேக சிறப்பம்சங்கள் உள்ளன. எனவே Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய மொபைல்களின் மூலம் கண்டிப்பாக மற்றவர்களை விட சிறந்த ஃபோட்டோக்களை நீங்கள் எடுக்க முடியும்.
விரைவில் வீடியோ எடுப்பதற்காக Quick Video ஆப்சனும் உள்ளது. உங்களுக்கு வீடியோ எடுக்க போதுமான நேரமில்லை எனில் கவலைப்பட தேவையில்லை. முக்கியமான தருணங்களை எல்லாம், கேமரா பட்டனை லாங் பிரஸ் செய்தாலே ரெக்கார்டு செய்துவிட முடியும்.
Smart Selfie Angle வசதியின் மூலம் ஃப்ரண்ட் கேமராவில், நல்ல வைடாக கவர் செய்து மிக அருமையாக பதிவு செய்யமுடியும்.
Custom Filter வசதியின் மூலம் உங்களுக்கு தேவையான மாதிரி, வண்ணங்களையும், பின்னணிகளையும், மங்கலான எஃபெக்ட்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
Galaxy A51 ஸ்மார்ட்ஃபோனில் Switch Camera While Recording என்ற ஆப்சன் உள்ளது. இதன்மூலம், நீங்கள் ஃப்ரண்ட் கேமராவில் ரெக்கார்டு செய்துகொண்டிருக்கும்போதே பின் கேமராவையும் ஆபரேட் செய்யமுடியும்.
கடைசியாக AI Galaxy Zoom வசதியை பற்றி பார்ப்போம். இந்த வசதியின் மூலம் குறைவான தரம் கொண்ட ஃபோட்டோக்களின் தரத்தையும் உயர்த்த முடியும்.
Galaxy A51 மொபைலில் 48 MP பிரைமரி சென்சார், 12 MP அல்ட்ரா வைட் லென்ஸ், 5 MP டெப்த் சென்சார், 5 MP மேக்ரோ லென்ஸ். செல்ஃபி கேமரா இரண்டுமே தலா 32 MP. குவாட் கேமரா செட்டப் இருப்பதால், உங்களது இன்ஸ்டாகிராம் பதிவு வேற லெவலில் இருக்கும்.
Galaxy A71 மொபைலில் 64 MP(மெகா பிக்ஸெல்) லென்ஸ், 12 MP அல்ட்ரா வைட் லென்ஸ் 123 டிகிரி ஃபீல்டு வியூ, 5 MP டெப்த் சென்சார் மற்றும் 5 MP மேக்ரோ கேமரா. க்ளோஸ் அப் ஷாட், எந்த கோணத்திலான ஷாட், அல்ட்ரா வைட் ஷாட் என எந்தவிதமான ஃபோட்டோக்களையும் உயர்தரத்துடன் எடுக்க முடியும்.
கூடுதல் பாதுகாப்பிற்கு Knox:
பிரைவசி தான் முக்கியம். பிரைவசி பாதுகாப்பிற்கான கூடுதல் ஆப்சனாக Knox உள்ளது. இந்த வசதி ஸ்மார்ட்ஃபோனின் ஹார்டுவேர் சிப் மற்றும் சாஃப்ட்வேரிலும் பில்ட் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் முக்கியமான, ரகசியமான ஆவணங்கள், புகைப்படங்கள், பாஸ்வேர்டுகள், வீடியோக்கள், சாம்சங் பே பரிவர்த்தனைகள் ஆகியவற்றை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய இரு ஃபோன்களுமே செம க்ளாஸ். 7.7 மிமி ஸ்லிம்மான ஃபோன்.
Prism Crush White, Prism Crush Black, Prism Crush Blue, and Haze Crush Silver ஆகிய கண்கவர் நிறங்களில் இந்த ஃபோன்கள் கிடைக்கின்றன.
Galaxy A51 மற்றும் Galaxy A71 ஆகிய ஃபோன்களை சாம்சங் ஷோரூம், ரீடைல் ஸ்டோர்கள் மற்றும் ஈ காமர்ஸ் தளங்களிலும் வாங்க முடியும்.