சூப்பர் ஸ்டைலிங், டாப் கிளாஸ் அம்சங்களுடன் ஸ்கிராம் 411 அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹிமாலயன் ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.

Royal Enfield Himalayan Scram 411 Launched

ராயல் என்ஃபீல்டு ஹிமாலன் ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் ஒருவழியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடலை சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய ஸ்கிராம்ப்ளர் ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இந்தியாவில் புதிய ஹிமாலயன் ஸ்கிராம் 411 விலை ரூ. 2.03 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹிமாலயன் ஸ்கிராம் 411 மாடலின் என்ஜின் மற்றும் சேசிஸ் ஹிமாலயன் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

எனினும், புதிய ஸ்கிராம் 411 மாடலில் அளவில் சிறிய 19 இன்ச் முன்புற வீல், சிறிய முன்புற சஸ்பென்ஷன் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கிராம் 411 மாடல் ஏழு விதமான நிறங்களில் கிடைக்கிறது. புதிய ஹிமாலன் ஸ்கிராம் 411 மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 மாடல்- பிளேசிங் பிளாக், ஸ்கைலைன் புளூ, கிராஃபைட் எல்லோ, கிராஃபைட் புளூ, கிராஃபைட் ரெட், வைட் ஃபிளேம் மற்றும் சில்வர் ஸ்ப்ரிண்ட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

Royal Enfield Himalayan Scram 411 Launched

"உலகளவில் மிகவும் பிரபலமான ஹிமாலயன் மாடல் எங்களை இளமை மிக்க தோற்றத்தில், அதிநவீன அம்சங்களுடன் புது மாடலை உருவாக்க தூண்டியது. ஸ்கிராம் 411 மாடல் இளம் வாடிக்கையாளர்கள் விரும்பும் சரியான கிராஸ்-ஓவர் மாடலாக இருக்கிறது. ரக்கட் அனுபவத்தை வழங்குவதோடு, நகர பயன்பாடுகளுக்கு ஏற்ற மோட்டார்சைக்கிளாக ஸ்கிராம் 411 உருவாக்கப்பட்டு இருக்கிறது." 

"எங்களின் மற்ற மோட்டார்சைக்கிள் மாடல்களை போன்றே புதிய ஸ்கிராம் 411 குளோபல் ரைடருக்காக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் உலகத் தரம் மிக்க பொறியியல் நுனுக்கங்களுடன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது மிகவும் சுவாரஸ்யமான, தனித்துவம் மிக்க மோட்டார்சைக்கிள் மாடல் ஆகும். இது உலகம் முழுக்க இளம் ரைடர்கள் புதிய ஸ்கிராம் 411 மாடலை விரும்புவார்கள் என நம்புகிறோம்," என ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பி கோவிந்தராஜன் தெரிவித்தார்.  

இந்தியாவில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 பேஸ் வேரியண்ட் ரூ. 2.03 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் கிராஃபைட் புளூ, கிராஃபைட் ரெட் மற்றும் கிராஃபைட் எல்லோ நிறங்களில் கிடைக்கிறது. இதன் மிட்-ஸ்பெக் விலை ரூ. 2.05 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் பிளேசிங் பிளாக் மற்றும் ஸ்கைலைன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. டாப் எண்ட் வைட் ஃபிளேம், சில்வர் ஸ்ப்ரிண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2.08 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Royal Enfield Himalayan Scram 411 Launched

தோற்றத்தில் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஸ்கிராம் 411 அதிக மாற்றங்கள் செய்யப்படவில்லை. இதன் ஹெட்லைட் புதிதாக இருக்கிறது. லக்கேஜ் மவுண்ட் செய்யப்பட்டு ஃபியூவல் டேன்க்கில் டேன்க் ஷிரவுட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் உள்ள ஃபியூவல் டேன்க் கொள்ளளவு 15 லிட்டர் கொண்டிருக்கிறது. இதன் சீட் சிங்கில்-பீஸ் கொண்டிருக்கிறது. இதன் கிராப் ரெயில் சிறியதாக இருக்கிறது. 

புதிய ஸ்கிராம் 411 மாடலில் 19 இன்ச் முன்புற வீல், 200mm கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் செண்டர் ஸ்டாண்டு வழங்கப்படவில்லை. வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை ஆப்ஷனல் அக்சஸரியாக பொருத்திக் கொள்ளலாம். புதிய ஸ்கிராம் 411 மாடலில் 411சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios