Asianet News TamilAsianet News Tamil

மாஸ் காட்டிய ஆய்வாளர்கள்.. வைரஸ் கிறுமிகளை கொன்று குவிக்கும் என்95 மாஸ்க் கண்டுபிடிப்பு..!

இந்த குழு அல்ட்ரா வைலட் எனப்படும் புற ஊதா கதிர்கள் மற்றும் அசிடோன் உள்ளிட்டவைகளை தான் இந்த வழிமுறையில் பயன்படுத்தி இருக்கிறது.

researches develop n95 face mask which kill viruses 
Author
First Published Jul 5, 2022, 3:02 PM IST

அமெரிக்க நாட்டின் நியூ யார்க் நகரில் செயல்பட்டு வரும் ரென்செலீர் பாலிடெக்னிக் இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் என்95 ரக முகக் கவசங்களுக்கு நோய் எதிர்ப்பு திறன் வழங்கும் புதிய வழிமுறையை கண்டு பிடித்து அசத்தி இருக்கின்றனர். முகக் கவசங்களில் ஆண்டி-வைரல் திறன் கொண்டவைகளை புகுத்தும் போது நோய் தாக்கும் அபாயம் பல மடங்கு குறைந்து இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர். 

இதையும் படியுங்கள்: ஏகப்பட்ட சலுகைகளுடன் ஒன்பிளஸ் நார்டு 2T விற்பனைக்கு வந்தது..!

இந்த வகை முகக் கவசங்கள் நீண்ட காலம் பயன்படுத்த முடியும். இதன் காரணமாக இவற்றை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற வசதிகள் இருப்பதால், இந்த புது வகை முகக் கவசங்கள் மிகக் குறைந்த அளவில் தான் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகின்றன. இவை சுற்றுச் சூழலுக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

இதையும் படியுங்கள்: விரைவில் இந்தியா வரும் புதிய K சீரிஸ் போன்... ரெட்மி வெளியிட்ட சூப்பர் டீசர்..!

ரெனசெலீர் இன்ஸ்டிட்யூட்-இன் பயோடெக்னாலஜி மற்றும் இண்டர்-டிசிப்லினரி பிரிவு உறுப்பினரும், துணை பேராசிரியர் ஆன ஹெலன் சா மற்றும் இணை பேராசிரியர் எட்முண்ட் பலெர்மோ இணைந்து முகக் கவசங்களை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். 

இதையும் படியுங்கள்:  ஸ்மார்ட்போனுடன் இதுவும் அறிமுகமாகிறது... பயனர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் அசுஸ்?

researches develop n95 face mask which kill viruses 

எப்படி முகக்கவசங்கள் மேம்படுத்தப்பட்டன?

அப்லைடு ஏ.சி.எஸ். மெட்டீரியல்ஸ் மற்றும் இண்டர்பேசஸ்-இல் வெளியாகி இருக்கும் ஆய்வு அறிக்கையின் படி, இந்த குழு என்95 ரக முகக் கவசங்களில் பயன்படுத்தப்படும் பாலி-ப்ரொப்பலின் ஃபில்ட்டர்களில் ஆண்டி-மைக்ரோபியல் பாலிமர்களை (நோய் தடுப்பு ஆற்றல் படைத்த நுண்ணுயிர் கிறுமிகள்) வெற்றிகரமாக புகுத்தும் வழிமுறையை கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.

“என்95 ரக முகக்கவசங்களில் உள்ள ஆக்டிவ் ஃபில்ட்ரேஷன் லேயர்கள் கெமிக்கல் மாற்றங்களுக்கு அதிக எதிர்விணை ஆற்றும் திறன் கொண்டவை ஆகும். இவை பில்ட்ரேஷன் முறையை மிக மோசமாகவும் மாற்றலாம். இவை பாலி-ப்ரொப்பலின் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றை கெமிக்கல் ரீதியில் மாற்றுவது மிகவும் கடினமான காரியம் ஆகும். ஏற்கனவே சீராக இயங்கும் ஃபைபர் நெட்வொர்க்கில் எந்த இடையூறும் ஏற்பட அனுமதிக்கக்கூடாது என்பதே மற்றும் ஒர் சவால் ஆகும். இதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், மூச்சு விடுவதற்கே சிரமம் ஆகி விடும்,” என ஹெலன் சா தெரிவித்தார்.

இந்த குழு அல்ட்ரா வைலட் எனப்படும் புற ஊதா கதிர்கள் மற்றும் அசிடோன் உள்ளிட்டவைகளை தான் இந்த வழிமுறையில் பயன்படுத்தி இருக்கிறது. இவை எளிதில் கிடைப்பது மட்டும் இன்றி, சுலபமாக செயல்படுத்தி விட முடியும். இந்த வழிமுறை ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பாலி-ப்ரொப்பலின் பில்ட்டர்களின் மீது செயல்படுத்த முடியும். 

எதிர்காலத்தில் விற்பனைக்கு வரும் என்95 முகக் கவசங்களில் இரண்டு பாலி-ப்ரொப்பலின் லேயர்கள் இடம்பெற்று இருக்கும். இரு லேயர்களில் ஒன்று சாதாரணமாகவும், மற்றொரு லேயரில் நோய் எதிர்ப்பு திறன் படைத்த பாலிமர்கள் புகுத்தப்பட்டு இருக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios