ஸ்மார்ட்போனுடன் இதுவும் அறிமுகமாகிறது... பயனர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் அசுஸ்?
அசுஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் புது கேமிங் ஸ்மார்ட்போனுடன் இதுவும் அறிமுகம் செய்யப்படும் என தகவல்.
அசுஸ் நிறுவனம் தனது புதிய தலைமுறை கேமிங் ஸ்மார்ட்போன் மாடல்களை இன்னும் சில மணி நேரங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ரோக் போன் 6 சீரிஸ் பெயரில் இவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த முறை அசுஸ் ரோக் போன் 6 மற்றும் ரோக் போன் 6 அல்டிமேட் என இரு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது. சர்வதேச வெளியீட்டின் போதே இந்திய வெளியீடும் நடைபெற இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி.. ஐபோனுக்கு ரூ. 12 ஆயிரம் வரை விலை குறைப்பு..!
கேமர்களை குறி வைத்து அரிமுகம் செய்யப்படுவதால், இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் குவால்காம் நிறுவனத்தின் சக்தி வாய்ந்த மொபைல் பிராசஸர், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படலாம். இந்திய சந்தையில் அசுஸ் ரோக் போன் 6 வெளியீடு இன்று (ஜூலை 5) மாலை 5.20 மணிக்கு நடைபெற இருக்கிறது. அறிமுக நிகழ்வு ரோக் இந்தியா யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் நேரலை செய்யப்படும்.
இதையும் படியுங்கள்: 19 நிமிடங்களில் முழு சார்ஜ்... 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகும் சியோமி ஸ்மார்ட்போன்..!
அசுஸ் ரோக் போன் 6 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
- 6.78 இன்ச் FHD+ AMOLED பேனல் கொண் டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட்
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
- 16 ஜிபி ரேம், 18 ஜிபி ரேம்
- 512 ஜிபி வரை ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரோக் யு.ஐ.
- 64MP பிரைமரி கேமரா
- 16MP அல்ட்ரா வைடு கேமரா
- 5MP மேக்ரோ லென்ஸ்
- 12MP செல்பி கேமரா
- IPX4 தரச் சான்று
- 6000mAh பேட்டரி
- 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசசதி
- 360 டிகிரி CPU கூலிங்
- டால்பி அட்மோஸ் வசதி
இதையும் படியுங்கள்: 6nm பிராசஸருடன் புது மோட்டோ ஸ்மார்ட்போன்... பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்..!
அசுஸ் ரோக் போன் 6 எதிர்பார்க்கப்படும் விலை:
இந்திய சந்தையில் புதிய அசுஸ் ரோக் போன் 6 மாடலின் விலை ரூ. 59 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 60 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அசுஸ் ரோக் போன் 6 அல்டிமேட் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 85 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.
ஸ்மார்ட்போன் மாடல்கள் மட்டும் இன்றி கேமிங் அக்சஸரீக்களையும் அசுஸ் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். ரோக் போன் 6 சீரிசுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேமிங் அக்சஸரீக்களை விரும்பும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனுடனோ அல்லது தனியாகவோ வாங்கி பயன்படுத்தலாம். ஸ்மார்ட்போன் விலை தவிர்த்து, அக்சஸரீக்களுக்கான கட்டணம் தனியே நிர்ணயம் செய்யப்படும்.