நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் ரிலையன்ஸ் ஜியோ புதிய ப்ரீபெய்ட் ப்ளான்!
நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது
நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரீபெய்ட் திட்டத்துடன் நெட்ஃபிளிக்ஸ் சந்தா வழங்கப்படுவது இதுவே முதன்முறை. அதன்படி, நெட்ஃபிளிக்ஸ் சந்தாவுடன் பயனர்களுக்கு இரண்டு ப்ளான்களை ஜியோ வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கூடிய ரூ.1,099 ரீசார்ஜ் திட்டம். இந்த திட்டத்தின்படி, மாதத்திற்கு ரூ.149 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ் மொபைல் சந்தா கிடைக்கும். இது தவிர, ஜியோ வெல்கம் ஆஃபருடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் கால் வசதியும் பயனர்களுக்கு கிடைக்கும்.
அடுத்ததாக ரூ.1,499 திட்டம். இதற்கும் 84 நாட்கள் வேலிடிட்டி உண்டு. இந்த திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூ.199 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ் மொபைல் சந்தா கிடைக்கும். இதுதவிர, ஜியோ வெல்கம் ஆஃபருடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் கால் வசதியும் பயனர்களுக்கு கிடைக்கும்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கும் நேரத்தை அதிகரிப்பது எப்படி.? ஈசியான 6 டிப்ஸ் இதோ !!
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் தாமஸ், “உலக தரத்திலான சேவைகளை எங்கள் பயனர்களுக்கு வழங்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்துடன் நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைப்பது அந்த உறுதியை நிரூபிக்கும் மற்றொரு படி. Netflix போன்ற உலகளாவிய கூட்டாளிகளுடன் எங்கள் கூட்டாண்மை வலுவாக வளர்ந்துள்ளது. நாங்கள் அனைவரும் இணைந்து உலகின் பிற பகுதிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குகிறோம்.” என்றார்.
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தின் டோனி ஜமேஸ்கோவ்ஸ்கி கூறுகையில், “ஜியோவுடனான எங்கள் உறவை விரிவுபடுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியர்களுக்கு விரும்பும் வகையில், கடந்த பல ஆண்டுகளாக, நாங்கள் பல்வேறு வெற்றிகரமான உள்ளூர் நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களை வழங்கி வருகிறோம். மேலும் ஜியோவுடனான எங்களது புதிய ப்ரீபெய்ட் கூட்டணி அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.” என நம்பிக்கை தெரிவித்தார்.