பட்ஜெட் விலையில் ப்ரோ போன் ஃபீல்! iPhone 19e-ல் ஆப்பிள் செய்யப்போகும் தரமான சம்பவம்!
iPhone 19e ஐபோன் 19e-ல் அதிரடி மாற்றம்! பட்ஜெட் விலையில் LTPO OLED திரை மற்றும் 120Hz ProMotion வசதி வரப்போகிறது. Phone 19e-ல் ஆப்பிள் செய்யப்போகும் தரமான சம்பவம்!

iPhone 19e
ஆப்பிள் நிறுவனம் தனது 'பட்ஜெட்' ரக ஐபோன்களில் புரட்சிகரமான மாற்றங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, 2026-ல் எதிர்பார்க்கப்படும் iPhone 19e மாடல் குறித்த கசிவுத் தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
பட்ஜெட் ஐபோனில் பிரிமியம் டிஸ்ப்ளே!
இதுவரை ஆப்பிள் தனது 'ப்ரோ' (Pro) மாடல்களில் மட்டுமே வழங்கி வந்த உயர்தர LTPO OLED திரையை, முதல்முறையாக மலிவு விலை மாடலான iPhone 19e-ல் அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் சாதாரண ஐபோன் பயனர்களும் இனி பிரிமியம் ரக காட்சிகளை அனுபவிக்க முடியும்.
120Hz ProMotion தொழில்நுட்பம்
LTPO பேனல்களின் வருகையால், iPhone 19e மாடலில் 120Hz ProMotion தொழில்நுட்பம் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது திரையின் புதுப்பிப்பு விகிதத்தை (Refresh Rate) தேவைக்கேற்ப மாற்றி அமைக்கும். இதனால் ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவம் மிக மென்மையாக இருப்பதோடு, பேட்டரி ஆயுளும் கணிசமாக மிச்சமாகும்.
ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே (Always-On Display)
இந்த புதிய திரை மாற்றத்தின் மூலம், 'ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே' வசதியும் இந்த பட்ஜெட் ஐபோனில் கிடைக்க வாய்ப்புள்ளது. இது லாக் ஸ்கிரீனில் நேரம் மற்றும் முக்கிய நோட்டிபிகேஷன்களை எப்போதும் காட்டும் வசதியாகும். ஆப்பிள் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த அம்சம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்க்கப்படும் மற்ற சிறப்பம்சங்கள்
iPhone 19e மாடலில் ஆப்பிளின் அடுத்த தலைமுறை சிப்செட் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள் இடம்பெறும் எனத் தெரிகிறது. மேலும், டிசைனில் சிறிய மாற்றங்கள் மற்றும் டைப்-சி (USB-C) சார்ஜிங் வசதி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 செப்டம்பர் மாத வாக்கில் இந்த போன் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

