Whatsappக்கு வலு போட்டி.. Jio களமிறக்கும் புதிய App - என்ன அது? எப்படி செயல்படுகிறது?
Reliance Jio New App : Metaவின் Whatsapp செயலிக்கு போட்டியாக ஒரு புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது பிரபல Reliance Jio நிறுவனம்.
பிரபல Reliance Jio நிறுவனம், உலக புகழ்பெற்ற Metaவின் WhatsAppக்கு மாற்றாக "JioSafe" என்ற செயலியை இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. Whatsapp செயலி போலவே இந்த புதிய செயலியில் வீடியோ அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் ஆடியோ அழைப்புகளையும் பேசி மகிழலாம். ஆனால் அதற்கு சில நிபந்தனைகளும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் தான் Reliance Jio தனது "JioSafe" என்ற செயலியை அறிமுகம் செய்தது. இதுவரை கண்டிராத அளவில் மிகவும் பாதுகாப்பான வீடியோ கால் அனுபவத்தை இந்த செயலி கொடுக்கும் என்று ஜியோ நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இந்த JioSafe அப்ளிகேஷனை, 5ஜி நெட்வொர்க் மோடில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது இதில் உள்ள அவரு மைனஸ் என்றே கூறலாம்.
எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ; நம்ம மோடி ஜியும் இருக்காரு பாருங்க!!
Metaவின் WhatsApp-க்கு மாற்றாக இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 'JioSafe'-ஐ கொண்டு வந்துள்ள நிலையில், JioSafe செயலி ஆண்ட்ராய்டு மற்றும் iOS என்று இரு சாதனங்களுக்கும் கிடைக்கிறது. மேலும் JioSafe செயலிக்கான சந்தா கட்டணம் மாதத்திற்கு ரூ. 199 ஆகும். ஆனால் ஜியோவின் புதிய தயாரிப்பாக இது இருப்பதால், முதல் வருடத்திற்கு நீங்கள் அதன் பயன்பாட்டை இலவசமாகப் பயன்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது ஜியோ.
மேலும் இந்த JioSafe செயலி, யாராலும் ஹேக் செய்ய முடியாத பாதுகாப்பான செயலி என்று ஜியோ அறிவித்துள்ளது. JioSafe, 5 நிலை பாதுகாப்பை வழங்குகிறது, இது வாடிக்கையாளர்களின் "தரவுகளை கசியவிடாத பாதுகாப்பு" என்றும் ஜியோ கூறுகின்றது. அதே வகையான பாதுகாப்பை தான் வாட்ஸ்அப் செயலியும் இப்போது என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை என்ற பெயரில் வழங்குகிறது.
எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் என்பது.. நீங்களும், நீங்கள் தொடர்புகொள்ளும் நபரும் மட்டுமே, நீங்கள் அனுப்பிய விஷயங்களை படிக்கவோ அல்லது கேட்கவோ முடியும் என்பதை உறுதிப்படுத்தும் ஒன்று.
5ஜி நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட ஜியோ சிம்மைப் பயன்படுத்தி, 5ஜி ஸ்மார்ட்போனில் மட்டுமே இந்த JioSafe செயலியை பயன்படுத்த முடியும். 4ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்துபவர்கள் அல்லது ஜியோ சிம் இல்லாதவர்கள் இந்தப் செயலியை பயன்படுத்த முடியாது. JioSafe செயலி இப்போது இந்தியாவில் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
Chandrayaan-3: சந்திரயான்-3 திட்டத்திற்காக 'உலக விண்வெளி விருது'.. இந்தியாவுக்கு கிடைத்த கௌரவம்!