எலான் மஸ்க் வெளியிட்ட AI பேஷன் ஷோ; நம்ம மோடி ஜியும் இருக்காரு பாருங்க!!
ஏஐ வந்த பிறகு பல்வேறு விதமான வீடியோக்களை க்ரியேட்டிவாக உருவாக்கப்படுகிறது. டெஸ்லா மற்றும் எக்ஸ்-ன் உரிமையாளர் எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரையும் போலவே குரல் மாதிரி, வீடியோ மாதிரி என பல புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்த்து வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் ராம்ப் வாக்கை நீங்கள் எப்போதாவது பார்த்ததுண்டா? அவர் அதை செய்வார் என்று என்றைக்காவது நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுதான் உண்டா?
இதுபோன்ற கேள்விகளுக்கு விடையளித்துள்ளது எலான் மஸ்க் வெளியிட்டுள்ள ஏஐ வீடியோ. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு வந்த பிறகு உலக தலைவர்கள் முதல் உள்ளூர் சினிமா நட்சத்திரங்கள் வரை அனைவரையும் போலவே குரல் மாதிரி, வீடியோ மாதிரி என பல புகைப்படங்கள், ஆடியோ மற்றும் வீடியோக்களை பார்த்து வருகிறோம். எக்ஸ்- ன் உரிமையாளர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் ஏஐ பேஷன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ரேம்ப் நடையை காட்டுகிறது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில் நெற்றியில் திலகம் அணிந்து, வண்ணமயமான ஆடை அணிந்து, ரேம்ப் வாக்கில் அசத்தலாக மோடி வருகிறார். மோடி மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என பட்டியல் நீள்கிறது.
மேலும் ஜஸ்டின் ட்ரூடோ, விளாடிமிர் புடின், போப் பிரான்சிஸ், ஆப்பிள் சிஇஓ டிம் குக், டொனால்ட் டிரம்ப், மார்க் ஜுக்கர்பேர்க் மற்றும் எலான் மஸ்க்கும் வீடியோவில் உள்ளார். இந்த வீடியோ மற்றும் இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
3 மணி நேரத்தில் முழு சார்ஜ்.. 85 கிமீ மைலேஜ்.. இந்தியாவின் மலிவு விலை ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு?