ரூ. 1 க்கு விற்பனையாகிறது ஸ்மார்ட்ஃபோன் - சியோமியின் தீபாவளி அதிரடி சலுகை...
தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல் ரீசார்ஜ் கட்டணம் முதல் ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் மிகவும் குறைந்த விலையில் வழங்கப்படவுள்ளது.
அதன்படி சியோமி நிறுவனம் தீபாவளியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்க உள்ளது. மேலும் தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.
ஏற்கனவே பண்டிகையை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை முதல் சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 4, ரெட்மி 4, mi மேக்ஸ் 2 ஆகியவற்றை அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் மூலம் சலுகையில் வழங்கி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வரும் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை கூடுதலாக சலுகைகள் வழங்க உள்ளது.
தினமும் காலை 11 மணிக்கும் மாலை 5 மணிக்கும் ரெட்மி நோட் 4, Mi ரவுட்டர் 3C, ரெட்மி 4, ப்ளூடூத் மினி ஸ்பீக்கர், Mi செல்ஃபி ஸ்டிக், ரெட்மி 4A, Mi பேண்ட் HRX எடிஷன், Mi கேப்சூல் இயர்போன், Mi வைபை ரிப்பீட்டர், Mi பேக்பேக் மற்றும் Mi VR பிளே ஆகியவற்றை ரூ.1-க்கு விற்பனை செய்யவுள்ளது.
மேலும், மீ மொபைல் அப்ளிகேஷன் மூலம் தினமும் மதியம் 2 மணிக்கும் மாலை 6 மணிக்கும் Bid to Win என்ற போட்டி நடைபெறுகிறது.
மேலும், ரூ.500 முதல் ரூ.3999 வரை சலுகை அளிக்கும் கூப்பன்களை வெல்ல, சியோமி இணையதளத்தில் உள்ள தி தியா ஹண்ட் என்ற போட்டியில் விளையாட வேண்டும்.