Asianet News TamilAsianet News Tamil

சீனாவை தொடர்ந்து இந்தியா வரும் ரெட்மி நோட் 11T ப்ரோ சீரிஸ்... என்னென்ன அம்சங்கள் தெரியுமா..?

ரெட்மி 11T ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் மாடல்களிலும் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. 

Redmi Note 11T Pro, Redmi Note 11T Pro Plus launch confirmed
Author
India, First Published May 19, 2022, 4:39 PM IST

ரெட்மி நோட் 11T சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சீன சந்தையில் மே 24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முதற்கட்டமாக ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இரு ஸ்மார்ட்போன்களின் கேமரா லே அவுட் மற்றும் நிறங்கள் பற்றிய தகவல்களை ரெட்மி டீசர் மூலம் அறிவித்து விட்டது.

இதோடு கீக்பென்ச் தளத்தில் ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களின் விவரங்கள் வெளியாகி உள்ளன. இந்திய சந்தையில் ஏற்கனவே ரெட்மி நோட் 11T 5ஜி ஸ்மார்ட்போன்  அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில், ரெட்மி நோட் 11T ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

Redmi Note 11T Pro, Redmi Note 11T Pro Plus launch confirmed

அம்சங்கள்:

கீக்பென்ச் விவரங்களின் படி ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 22041216UC எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 8100 பிராசஸர், மாலி G610 MC6 GPU, ஹைப்பர் என்ஜின் 5.0 கேமிங் சூட், 8GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 6GB ரேம், 128GB மெமரி, 8GB ரேம், 128GB மெமரி, 8GB ரேம், 512GB மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ரெட்மி நோட் 11T ப்ரோ ஸ்மார்ட்போன் 4300mAh பேட்டரி மற்றும் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 

ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் 8GB ரேம், 128GB மெமரி, 8GB ரேம், 256GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தகவல் வெளியாகி  உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 12GB வேரியண்டும் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. ரெட்மி 11T ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11T ப்ரோ பிளஸ் மாடல்களிலும் 6.6 இன்ச் டிஸ்ப்ளே, மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இவை புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios