Redmi Note 11S price : பட்டையை கிளப்பும் ஆஃபர்களுடன் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் விற்பனை துவக்கம்

ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை அசத்தல் சலுகைகளுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. 

Redmi Note 11S Goes on First Sale in India Today Price, Specs, Launch Offers

ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (பிப்ரவரி 21, மதியம் 12) துவங்கியது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை Mi மற்றும் அமேசான் வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனுடன் நோட் 11S மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 90Hz AMOLED டிஸ்ப்ளே, நான்கு கேமரா சென்சார்கள், மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

ரெட்மி நோட் 11S மாடலின் 6GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 16,499 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 17,499 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 18,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹாரிசான் புளூ, போலார் லைட் மற்றும் ஸ்பேஸ் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

இந்தியாவில் புதிய ரெட்மி நோட் 11S மாடலின் விற்பனை சியோமி, அமேசான் வலைதளங்கள், Mi ஹோம் ஸ்டோர்கள், Mi ஸ்டூடியோக்கள் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. 

Redmi Note 11S Goes on First Sale in India Today Price, Specs, Launch Offers

சலுகை விவரங்கள் 

சியோமி மற்றும் அமேசான் இணைந்து ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகள் மற்றும் மாத தவணை முறை சலுகையில் வாங்கும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்குகின்றன. இத்துடன் வட்டியில்லா மாத தவணை வசதி, எக்சேன்ஜ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

ரெட்மி நோட் 11S அம்சங்கள்

புதிய ரெட்மி நோட் 11S மாடலில் 6.43 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டாட் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G96 பிராசஸர், அதிகபட்சம் 8GB LPDDR4X ரேம், 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ  மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.  இத்துடன் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. 

கனெக்டிவிட்டிக்கு 4ஜி எல்.டி.இ., வை-ஃபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி மற்றும் 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அக்செல்லோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், கைரோஸ்கோப், மேக்னெடோமீட்டர் மற்றும் பிராக்சிமிட்டி சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 11S ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி, 33 வாட் ப்ரோ ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios