Redmi Note 11 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு!
ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் விலைக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை மற்றும் இதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
ஷாவ்மி நிறுவனம் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மாரட்போன்களை தொடங்கி 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது ரெட்மி நோட் 12 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில், ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
Redmi Note 11 இல் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன, அவை அனைத்தும் 500 ரூபாய் தள்ளுபடியைப் பெற்றுள்ளன. Redmi Note 11 இன் விலை இப்போது 12,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது, இதன் அசல் விலை 13,499 ரூபாய் ஆகும். இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இதே போல். 6ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.13,499 என்றும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரியின் விலை 14,499 என்றும் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய விலை மாற்றங்கள் Amazon மற்றும் ஷாவ்மியின் அதிகாரப்பூர்வ தளமான Mi.com இணையதளத்தில் அமலுக்கு வந்துள்ளன. பிளிப்கார்ட்டில் இன்னும் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறது, அதாவது 12,799 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. Mi.com தளத்தில் குறிப்பிட்ட வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.1,000 உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வங்கி கார்டு வைத்திருப்பவர்கள் Mi.com தளம் மூலமாக ரூ.11,999 விலையில் ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போனை பெறலாம்.
Top Best Laptops 2022: லேப்டாப் வாங்க போறீங்களா… இத பாத்துக்கோங்க!
Redmi Note 11 ஆனது 4G ஸ்மார்ட்போன் ஆகும், குவால்காம் ஸ்னாப் டிராகன் 680 SoC பிராசசரில் இயங்குகிறது. இந்த வரம்பில் 5G போன்கள் இருந்தாலும், 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதில் நாட்டம் இல்லாதவர்கள் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனை வாங்கலாம். இது போதுமான அளவு பெரிய டிஸ்ப்ளே மற்றும் பேட்டரி கொண்ட ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் போன்.
Redmi Note 11 இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. 6.43 இன்ச் Full HD+ டிஸ்ப்ளே, 50 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 13 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜர், 5000mAh சக்தி கொண்ட பேட்டரி, IP53 ரேட்டிங் ஆகியவை உள்ளன.