Redmi K60 சீரிஸ் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ

Redmi K60 சீரிஸ் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. மூன்று மாடல்கள் உள்ளன -- Redmi K60, Redmi K60 Pro மற்றும் Redmi K60E. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

Redmi K60 series launched: Price, specifications, key features check here

Redmi K60E ஆனது மலிவான மாடலாகும், 8GB + 128GB மெமரி மாடலுக்கு RMB 2,199 (சுமார் ரூ. 26,200) இல் தொடங்குகிறது. 8GB + 256GB மாடல் RMB 2,399 (சுமார் ரூ. 28,600), 12GB + 256GB மாடல் RMB 2599 (சுமார் ரூ. 31,000), 12GB + 512GB மாடல் RMB 2,799 (சுமார் ரூ. 33,400) விலையில் வருகிறது.

Redmi K60 விலையைப் பொறுத்தவரையில், இது 8GB + 128GB மெமரி மாடலுக்கு RMB 2,499 (சுமார் ரூ. 29,800) இல் தொடங்குகிறது. 8 ஜிபி + 256 ஜிபி மாடல் RMB 2699 (சுமார் ரூ. 32,200), 12 ஜிபி + 256 ஜிபி, 12 ஜிபி + 512 ஜிபி மற்றும் 16 ஜிபி + 512 ஜிபி ஆகியவை முறையே RMB 2,999 ( ரூ. 35,700), RMB 3299 (ரூ. 39,300) மற்றும் RMB 3,599 (ரூ.42,900) என்று அமைகிறது.

கடைசியாக, டாப்-எண்ட் மாடலான Redmi K60 Pro ஆனது 8GB + 128GB மாடலுக்கு RMB 3,299 (சுமார் ரூ. 39,300) விலையில் வெளியிடப்பட்டது. இதில் மற்ற மாடல்களும் உள்ளன. 8GB + 256GB RMB 3,599 (சுமார் ரூ. 42,900), 12GB + 256GB மாடல் RMB 3,899 (சுமார் ரூ. 46,500), 12GB + 512GB மாடல் RMB 4,299 (சுமார் ரூ. 620 GB), 4,599 (சுமார் ரூ. 54,800). 16ஜிபி + 512ஜிபி மெமரித்துடன் வரும் ப்ரோ மாடலின் சிறப்புப் பதிப்பும் RMB 4,599 (தோராயமாக ரூ. 54,800) விலையில் உள்ளது.

Redmi K60 சீரிஸ் சிறப்பம்சங்கள்:

Redmi K60 மற்றும் K60 Pro ஆனது 6.67-இன்ச் QHD+ AMOLED டிஸ்ப்ளே 3200 X 1440 பிக்சல்கள், 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. Redmi K60 போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ Gen1 SoC பிராசசர் உள்ளது. Redmi K60 Pro போனில் உயர்நிலை ஸ்னாப்டிராகன் 8 Gen 2 பிராசசர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 கஸ்டம் ஸ்கின் வழங்கப்பட்டுள்ளது. 

Xiaomi Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்! அப்படி என்ன ஸ்பெஷல்?

Redmi K60 ஆனது 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. Redmi K60 Pro ஆனது OIS மற்றும் LED ஃபிளாஷ் கொண்ட 50/54-மெகாபிக்சல் Sony IMX800 பிரைமரி சென்சார், 118-டிகிரி FoV உடன் 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ ஆகியவற்றைக் கொண்ட டிரிபிள் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

Redmi K60 ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 30W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன், 5500mAh சக்தி கொண்ட  பேட்டரி உள்ளது. Redmi K60 Pro ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி உள்ளது. இந்த இரண்டு ஃபோன்களும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர்கள், 5G வசதி, போர்ட்டை சார்ஜ் செய்வதற்கான USB Type-C போர்ட் மற்றும் பலவற்றை கொண்டுள்ளன. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios