Xiaomi Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம்! அப்படி என்ன ஸ்பெஷல்?

ஷாவ்மி நிறுவனம் இந்தியாவில் Redmi 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் Redmi Note 12 5G, Redmi Note 12 Pro 5G மற்றும் Redmi Note 12 Pro Plus 5G ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இருக்கும்.

Xiaomi Redmi Note 12 Pro 5G, Pro Plus 5G Launch Date: Check expected price and other specifications

Xiaomi Redmi Note 12 Pro 5G, Pro Plus 5G: எப்போது வருகிறது?

ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வரும் ஜனவரி 5, 2023 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று ஷாவ்மி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கடந்த ஏற்கனவே அக்டோபர் மாதம் சீனாவில் இந்தத் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. தற்போது இந்தியாவில் கூடுதல் அம்சங்களுடன் களமிறங்குகிறது. 

Xiaomi Redmi Note 12 Pro 5G எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

Redmi Note 12 Pro 5G ஸ்மார்ட்போன் குறித்த சில விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதன்படி, இதில் 6.68 இன்ச் OLED டிஸ்ப்ளே, 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 2MP மேக்ரோ சென்சார், 50-மெகாபிக்சல் பிரைமரி சென்சார் இடம்பெறும்.  மொத்தத்தில் டிரிபிள்-கேமரா அமைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கத்தில், பயனர் 16MP செல்ஃபி கேமரா இருக்கும்..

இந்த ஃபோன் மீடியாடெக் டிமன்சிட்டி 1080 MT6877V பிராசசரில் இயங்கும், Li-Polymer வகை 5000mAh சக்தி கொண்ட முடியாத பேட்டரியைக் கொண்டிருக்கும். இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வர வாய்ப்புள்ளது. விலை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை, இருப்பினும், ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜியின் விலை ரூ. 20,000 ஆக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது. 

Xiaomi Redmi Note 12 Pro Plus 5G எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

Xiaomi Redmi Note 12 Pro Plus 5G ஆனது 6.67 இன்ச் OLED டிஸ்ப்ளேவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Redmi Note 12ஐப் போலவே, Pro Plus ஆனது 8MP மற்றும் 2MP உடன் 200MP பிரைமரி கேமராவுடன் மூன்று-கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும். முன்பக்கத்தில் அதே 16MP செல்ஃபி கேமரா இருக்கும். 

பேட்டரியைப் பொறுத்தவரை, 120W ஃபாஸ்ட் ஹைப்பர்சார்ஜ் அம்சத்துடன் 5,000mAh சக்தி கொண்ட  Li-Polymer பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டிருக்கும். இதன் விலை ரூ.30,000 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi Note 12 5G விரைவில் இந்தியாவில் அறிமுகம்! அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியீடு!!

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்பீக்கர்கள், 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் 5ஜி ஆதரவுடன் கூடிய இரட்டை சிம் ஆகியவை ரெட்மி நோட் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலுள்ள வழக்கமான அம்சங்களாகும்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios