சியோமியின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான Redmi 15C 5G இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. 6.9 இன்ச் 120Hz டிஸ்ப்ளே, 6000mAh பேட்டரி போன்ற சக்திவாய்ந்த அம்சங்களுடன் ரூ.12,499 ஆரம்ப விலையில் கிடைக்கிறது.

சியோமியின் பட்ஜெட் பிரெண்ட்லி C series-இன் புதிய மாடலான Redmi 15C 5G, இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வந்த Redmi 14C-யின் அடுத்த தலைமுறை மாடலாக அறிமுகமான இந்த போன், 6.9 இன்ச் 120Hz டிஸ்ப்ளே மற்றும் 6000mAh பேட்டரி போன்ற மேம்பட்ட அம்சங்களுடன் வருகிறது. ரூ.15,000 விலை வரம்பில் இது Realme P4X, Infinix Hot 60i, Oppo K13 போன்ற மாடல்களுடன் நேரடி போட்டியில் இருக்கும்.

வேரியன்ட்கள் மற்றும் விலை

Redmi 15C மூன்று நிறங்களில் கிடைக்கிறது. அவை Moonlight Blue, Dusk Purple, Midnight Black ஆகும். ஸ்டோரேஜ்களில் 4GB/128GB, 6GB/128GB மற்றும் 8GB/128GB ஆகிய மூன்று வேரியன்ட்களாகக் கிடைக்கிறது.

- 4GB + 128GB மாடல் – ரூ.12,499

- 6GB + 128GB மாடல் – ரூ.13,999

- 8GB + 128GB மாடல் – ரூ.15,499

இந்த மாடல் டிசம்பர் 11 முதல் Amazon, Mi.com மற்றும் ரீடெயில் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

டிசைன் மற்றும் செயல்திறன்

211 கிராம் எடை, 8.05mm தடிமன், பிளாஸ்டிக் பின்பக்கம், சதுர கேமரா வடிவமைப்பு இந்த போனை எளிமையாகவும், ஸ்டைலிஷாகவும் காட்டுகிறது. IP64 சான்றிதழ் மூலம் நீர்/தூசி எதிர்ப்பு பாதுகாப்பு கிடைக்கிறது. ஹார்ட்வர் பக்கத்தில், MediaTek Dimensity 6300 சிப்செட், LPDDR4X RAM, UFS 2.2 ஸ்டோரேஜ் மற்றும் 16GB வரை விர்ச்சுவல் RAM ஆதரவு தரப்பட்டுள்ளது. இதன் புதிய HyperOS 2 (Android 15) இரண்டு வருட OS அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்களுடன் கிடைக்கும்.

கேமரா, பேட்டரி மற்றும் 5G இணைப்பு

Redmi 15C-யில் 50MP முக்கிய கேமரா, 8MP செல்ஃபி லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அன்றாட புகைப்படம், வீடியோ கால் அனைத்திற்கும் போதுமான தரமுடையது. சக்திவாய்ந்த 6000mAh பேட்டரி, 33W வேகமாக சார்ஜிங், 10W reverse charging ஆகிய வசதிகள் நீண்ட நேர பயன்பாட்டை உறுதி செய்கின்றன. 5G நெட்வொர்க் ஆதரவு, 3.5mm ஆடியோ ஜாக், side fingerprint scanner போன்ற அம்சங்களும் இதில் உள்ளது.