Asianet News TamilAsianet News Tamil

Redmi 13C லான்ச் தேதி வெளியீடு.. தரமாக களமிறங்கும் ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் போன்.. விலை என்ன? முழு விவரம்!

Redmi 13 C Indian Launch : உலக மொபைல் சந்தையிலும் சரி, இந்திய மொபைல் சந்தையிலும் சரி பெரிய அளவிலான தாக்கத்தை கடந்த சில ஆண்டுகளாகவே ஏற்படுத்தி வருகிறது ரெட்மீ நிறுவனம் என்று கூறினால் அது மிகையல்ல.

Redmi 13 C Indian launch date announced 5g and 4g Lte price and full specifications ans
Author
First Published Dec 1, 2023, 12:32 PM IST

இந்நிலையில் தனது புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை இம்மாதம் இந்தியாவில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. ஏற்கனவே இவ்வாண்டு ரெட்மீ 12 ஃபோன்களை வெளியிட்டு மிகப்பெரிய அளவில் விற்பனை சாதனையை படைத்த ரெட்மி நிறுவனம், தற்பொழுது தனது 13 சீரியஸ் போனை வெளியிட உள்ளது. இந்த ரெட்மி 13 C ஃபோனானது ஏற்கனவே வெளிநாடுகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருகின்ற டிசம்பர் மாதம் 6ம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது இந்த ரெட்மி 13C மாடல், மேலும் இது 5g மற்றும் 4ஜி LTE என்று இரு மாடல்களில் இங்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ரெட்மி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது இவ்வாண்டின் பட்ஜெட் ஸ்மார்ட் போன் வகையை சேர்ந்ததாகும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

4GB RAM / 128 GB ROM, 6GB RAM / 128 GB ROM, 8GB RAM / 256 GB ROM, என மூன்று வேரியண்டுகளில் இந்த செல்போனை ரெட்மி நிறுவனம் வெளியிட உள்ளது. இதில் ரெட்மி மொபைலில் 5ஜி மாடல் ரூபாய் 15 ஆயிரம் என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அதே போல 4G LTE மாடல் பத்தாயிரம் ரூபாயில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Redmi 13C 5G மாடல் ஸ்பெக் 

MediaTek's Dimensity 6100+ சிப்செட் பொருத்தப்பட்டிருக்கும்
8 GB RAM
256 GB ROM 
18 W ஃபாஸ்ட் சார்ஜிங் இதில் இணைக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

Redmi 13C 4G LTE மாடல் ஸ்பெக்

பெரிய அளவில் 6.74 இன்ச் LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. (bezel அதிக அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது)
MediaTek Helio G85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது,
Android 13, MIUI 14 OS
90 Hz Refresh Rate 
4GB/ 128GB, 6GB/ 128GB, மற்றும் 8GB/ 256GB உள்ளிட்ட variantகளில் வருகின்றது.
18W சார்ஜிங் திறன் கொண்ட 5,000 mAh பேட்டரி

ஸ்மார்ட் வாட்ச் வாங்க செம சாய்ஸ்! AMOLED டிஸ்பிளே, 20 நாள் நீடிக்கும் பேட்டரியுடன் ரெட்மீ வாட்ச் 4 அறிமுகம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios