மார்ச் 17-இல் ரெட்மி 10 லான்ச் - என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

சியோமி நிறுவனம் தனது ரெட்மி 10 ்ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

Redmi 10 India Launch Date Set for March 17

இந்திய சந்தையில் புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போன் மார்ச் 17 ஆம் தேதி அறிமுகமாகும் என சியோமி நிறுவனம் அறிவித்து உள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் போன்ற நாட்ச், குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், டூயல் கேமரா போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என தற்போதைய டீசரில் தெரியவந்துள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் அறிவிக்கப்பட்டது. இத்துடன் நிகழ்வுக்கான அழைப்பிதழ்களையும் சியோமி அனுப்ப துவங்கி இருக்கிறது. இத்துடன் புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனிற்கென பிரத்யேக வலைப்பக்கம் திறக்கப்பட்டு இருக்கிறது. இதில் புது ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட இருக்கிறது. 

Redmi 10 India Launch Date Set for March 17

ரெட்மி 10 இந்திய விலை விவரங்கள்

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ. 8,999 என துவங்கும் என கூறப்படுகிறது. பழைய ரெட்மி 9 மாடல் தற்போது ரூ. 9,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய ரெட்மி 10 விலை ரெட்மி 10 பிரைம் மாடலை விட குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி 10 பிரைம் விலை ரூ. 12,499 என துவங்குகிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

மைக்ரோசைட் தகவல்களின் படி புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் வாட்டர் டிராப் போன்ற டிஸ்ப்ளே நாட்ச், 6nm முறையில் உருவாக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா சென்சார்கள், 50MP பிரைமரி கேமரா யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது. சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 10 சீரிஸ் மாடல்களில் 50MP பிரைமரி கேமராவுடன் மொத்தம் நான்கு சென்சார்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Redmi 10 India Launch Date Set for March 17

தோற்றத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ரெட்மி 10 மாடல் சர்வதேச சந்தையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 10 மாடல்களை விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. டீசர்களின் படி புதிய ரெட்மி 10 ஸ்மார்ட்போன் அல்ட்ரா ஃபாஸ்ட் ஸ்டோரேஜ், மேசிவ் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த மாடலின் பின்புறம் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios