ஸ்கூட்டருக்கு திடீர் விலை குறைப்பு... வாடிக்கையாளர்களுக்கு டி.வி.எஸ்.-இன் குட் நியூஸ்...!
டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சமீபத்தில் தனது என்டார்க் 125 ஸ்கூட்டரின் புது வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. டி.வி.எஸ். என்டார்க் 125 XT பெயரில் அறிமுகமான புது வேரியண்ட் விலை தற்போது குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 03 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போது விலை குறைப்பின் படி டி.வி.எஸ். என்டார்க் 125 XT மாடலின் விலை ரூ. 5 ஆயிரத்து 762 குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த ஸ்கூட்டர் விலை அதற்குள் குறைக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய விலை குறைப்பின் மூலம் டி.வி.எஸ். என்டார்க் 125 XT விற்பனை அதிகரிக்கும் என டி.வி.எஸ். மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. புதிய என்டார்க் 125 XT தவிர என்டார்க் சீரிசில் வேறு எந்த வேரியண்டின் விலையிலும் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி:
புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 XT வேரியண்ட் மாடலில் ஹைப்ரிட் SmartXonnect சிஸ்டம் மற்றும் கலர்டு டி.எப்.டி. மற்றும் எல்.சி.டி. கன்சோல் உள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் 560 ஹை-டெக் அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த பிரிவில் முதல் முறையாக வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது SmartXtalk சிஸ்டம் என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் டி.வி.எஸ். இண்டெலிகோ தொழில்நுட்பம் உள்ளது.
மேலும் இதில் சைலண்ட், ஸ்மூத் மற்றும் ஸ்டார்ட்-ஸ்டாப் அம்சம், ஸ்போர்ட் அலாய் வீல்கள் உள்ளன. டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் XP மாடல் விலை ரூ. 89 ஆயிரத்து 211 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வேரியண்டில் டி.எப்.டி. ஸ்கிரீன் மற்றும் SmartXonnect சிஸ்டம், சக்திவாய்ந்த 124.8 சிசி, சிங்கில் சிலிண்டர், 3 வால்வுகள் கொண்ட ஏர் கூல்டு என்ஜின் வழங்க்ப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 9.25 ஹெச்.பி. பவர், 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.