Asianet News TamilAsianet News Tamil

உங்க மொபைலுக்கும் இதே மாதிரி எமர்ஜென்சி அலர்ட் வந்துச்சா? இதுக்கு என்ன அர்த்தம்?

மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் பிராட்காஸ்டிங் அமைப்புகளின் அவசர எச்சரிக்கை அனுப்பும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

Received An Emergency Alert On Your Phone Today? Here's What It Means
Author
First Published Aug 17, 2023, 5:35 PM IST

பல ஸ்டார்ட்போன் பயனர்களுக்கு 'தீவிர அவசரகால எச்சரிக்கை' என்ற தலைப்புடன் ஃபிளாஷ் மெசேஜ் ஒன்று இன்று (வியாழக்கிழமை) அனுப்பப்பட்டுள்ளது. இது நாட்டின் அவசரகால எச்சரிக்கை அமைப்பை சோதிக்கும் வகையில் அனுப்பப்பட்டது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் செல் பிராட்காஸ்டிங் அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி எச்சரிக்கை செய்தி ஆகும். இந்தச் செய்தியைப் பெற்றவர்கள் அதனைப் புறக்கணித்துவிடலாம். அந்தத் தகவலை முன்னிட்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தச் செய்தி நாடு முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என்று அந்த ஃபிளாஷ் மெசேஜில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொரிமுத்து ஐயனார் கோயில் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் மஞ்சப்பையில் விதைப்பந்து, மரக்கன்றுகள் விநியோகம்

Received An Emergency Alert On Your Phone Today? Here's What It Means

இன்று மதியம் 1.35 மணிக்கு அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த செய்தி வந்துள்ளது.

மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் பிராட்காஸ்டிங் அமைப்புகளின் அவசர எச்சரிக்கை அனுப்பும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு இதுபோன்ற சோதனைகள் வெவ்வேறு பிராந்தியங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்று தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம், சுனாமி மற்றும் திடீர் வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு சிறப்பாக தயாராக இருக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து அரசு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் ஜூலை 20ஆம் தேதி இதேபோன்ற சோதனை எச்சரிக்கையைச் செய்தி அனுப்பப்பட்டது.

சந்திரயான்-3 vs லூனா-25: நிலவின் தென்துருவத்தில் முதலில் தடம் பதிக்கப்போவது இந்தியாவா? ரஷ்யாவா?

Follow Us:
Download App:
  • android
  • ios