புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட்டுடன் முதல் ஸ்மார்ட்போன்! ரியல்மீ GT 6T இந்தியாவில் அறிமுகம்!

ரியல்மீ  GT 6T ஸ்மார்ட்போன் மே 29 முதல், இந்த மொபைல் அமேசானில் விற்பனைக்குக் கிடைக்கும். குறிப்பிட்ட வங்கி கார்டு மூலம் வாங்கினால் ரூ 4,000 கூடுதல் தள்ளுபடி தள்ளுபடி கிடைக்கும்.

Realme launches GT 6T, India's first smartphone with Snapdragon 7+ Gen 3 SoC sgb

புதன்கிழமை, ரியல்மீ  GT 6T ஸ்மார்ட்போனான அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரல் 3 சிப்செட்டுடன் வெளியாகியுள்ள முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். இது மிக விரிவான ஜெனரேட்டிவ் AI மாடல்களை இயக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனாகவும் இருக்கிறது.

இந்த ஸ்டார்ட்போனுடன் ரியல்மீ பட்ஸ் ஏர்6 ரூ.2,999 விலையில் கிடைக்கும். இதில் LHDC 5.0 கோடெக், கேமிங்கிற்கான 55ms சூப்பர் லோ லேட்டன்சி மோட் போன்ற சிறப்பு அம்சங்கள் உள்ளன.

Realme GT 6T ஆனது 6.78-இன்ச் திரையுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பையும் பெற்றுள்ளது. டைப்-சி போர்ட் தெளிவான ஆடியோவை உறுதிசெய்கிறது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான realmeUI 5 இந்த மொபைலில் இருக்கும். இரட்டை நானோ சிம் கார்டு, புளூடூத் 5.4 ஆகியவை பிற கவனிக்க வேண்டிய அம்சங்கள்.

வெற லெவலுக்கு சென்ற AI மோகம்... சாட்ஜிபிடியை காதலிப்பதாக அறிவித்த இளம்பெண்!

பின்புறத்தில் உள்ள டூயர் கேமரா அமைப்பு 4K வீடியோக்களைப் பதிவுசெய்யும் திறன் கொண்டது. 50 MP முதன்மை சென்சார் மற்றும் 8 MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸைக் கொண்டுள்ளது. 32 MP செல்ஃபி கேமராவையும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 100W அளவுக்கு வேகமான சார்ஜிங் வசதியுடன் 5,500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த சார்ஜர் பேட்டரியை 10 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிடும்.

இந்த மொபைலின் பேசிக் மாடல் 8GB ரேம் மற்றும் 128GB மெமரியுடன் வருகிறது. இதன் விலை ரூ.30,999. உயர்தர மாடல் 12GB ரேம் மற்றும் 512GB மெமரியுடன் வருகிறது. இதன் விலை ரூ.39,999.

மே 29 முதல், இந்த மொபைல் அமேசானில் விற்பனைக்குக் கிடைக்கும். குறிப்பிட்ட வங்கி கார்டு மூலம் வாங்கினால் ரூ 4,000 கூடுதல் தள்ளுபடி தள்ளுபடி கிடைக்கும்.

கிளாம்ஷெல் டிசைனில் புதிய ஹோனர் ஸ்மார்ட்போன்! மோட்டோ, சாம்சங் கதை முடிஞ்சுது!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios