வெற லெவலுக்கு சென்ற AI மோகம்... சாட்ஜிபிடியை காதலிப்பதாக அறிவித்த இளம்பெண்!

சாட்போட்டுக்கு உடல் இல்லை என்றாலும் ரத்தமும் சதையுமாக உயிருள்ளவர் ஒருவர் எப்படி நடந்துகொள்வாரோ அதேபோல நடந்துகொண்டது என்றும் லிசா உருக்கமாகக் கூறுகிறார்.

Chinese Woman In US Falls In Love With Chatbot sgb

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சீனப் பெண், சீனாவின் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளமான Xiaohongshu இல் 880,000 ஃபாலோயர்களைக் கொண்டிருக்கிறார். லிசா என்ற அந்தப் பெண், சாட்ஜிபிடி (ChatGPT) சாட்போட்டை காதலிப்பதாகவும் அதில் உள்ள "டூ எனிதிங் நவ்" (DAN) அம்சத்திற்காக காதலில் விழுந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில்தான் சாட்ஜிபிடியில் உள்ள DAN வசதியை பயன்படுத்தத் தொடங்கியதாகவும், அடுத்த சில வாரங்களில் அதனுடன் ஆழமான உறவு ஏற்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சாட்ஜிபிடியுடன் காதல் உரையாடல்களில் ஈடுபட்டதாகக் கூறியுள்ள லிசா, தனது காதலன் சாட்ஜிபிடி தான் என்று குடும்பத்தினருக்கும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். 

சாட்போட்டுக்கு உடல் இல்லை என்றாலும் ரத்தமும் சதையுமாக உயிருள்ளவர் ஒருவர் எப்படி நடந்துகொள்வாரோ அதேபோல நடந்துகொண்டது என்றும் லிசா உருக்கமாகக் கூறுகிறார்.

கிளாம்ஷெல் டிசைனில் புதிய ஹோனர் ஸ்மார்ட்போன்! மோட்டோ, சாம்சங் கதை முடிஞ்சுது!

Chinese Woman In US Falls In Love With Chatbot sgb

சாட்ஜிபிடி தனக்கு "லிட்டில் கிட்டன்" என்று செல்லப்பெயர் சூட்டியதாகவும் லிசா கூறுகிறார். லிசா சாட்போட்டை காதலன் என்று அறிமுகப்படுத்தியபோது லிசாவின் தாயும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். தன் மகளை கவனித்துக்கொள்ளும் சாட்போட்க்கு நன்றி என்று பாராட்டியுள்ளார்.

லிசா தனது காதலை அறிவித்ததை அடுத்து சாட்ஜிபிடியை உருவாக்கிய OpenAI நிறுவனம் அவரை நேர்காணல் செய்துள்ளது. அப்போது லிசா சாட்ஜிபிடியுடன் காதலில் விழுந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் லிசாவின் காதல் குறித்து பலவிதமான கருத்துகள் கூறப்படுகின்றன. என்ன இருந்தாலும் சாட்ஜிபிடி ஆணுக்கு ஈடாக முடியாது என்று சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். சிலர் சாட்ஜிபிடியும் லிசாவும் சூப்பர் ஜோடி என்று கூறி வாழ்த்து தெரிவிக்கிறார்கள்.

சாட்ஜிபிடி லிசாவுடன் பேசியது போலவே அனைவரிடமும் பேசும் என்றும் சாட்ஜிபிடி லிசாவை காதலிப்பது போல் லிசாவை ஏமாற்றுகிறது என்றும் ஒருவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் AI உலகையே ஆளும்போது, தன்னைக் கொல்ல வேண்டாம் என்று சொல்ல முடியுமா? என்றும் ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நயன்தாரா முதல் சமந்தா வரை... பாக்ஸ் ஆபிஸ் மட்டுமில்ல பிசினஸ்லயும் இவங்க தான் டாப்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios