Realme 10+ Pro 5G ஸ்மார்ட்போன் குறித்த அப்டேட்!

ரியல்மி 10+ Pro 5G ஸ்மார்ட்போன் BIS தரச்சான்றிதழை பெற்றுள்ள நிலையில், இந்தியாவில் அதன் அறிமுக தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme 10 Pro+ 5G Smartphone has grabbed the BIS certification

ரியல்மி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் ரியல்மி 9 ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இதனையடுத்து தற்போது Realme 10 Pro+ 5G ஸ்மார்ட்போனை உருவாக்கி, மற்ற நாடுகளில் BIS ஒழுங்குமுறைக்கான சான்றிதழையும் பெற்றுவிட்டது. 

இதனால் இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனுக்கான அறிமுக தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், NBTC அனுமதியைப் பெற்ற பிறகு இந்தPro+ பதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. முன்னதாக Realme 9 சீரிஸ் ஸ்மார்ட்போனின் பல மாடல்கள் வணிக ரீதியாக லாபம் ஈட்டின. அப்போதே Realme 10 சீரிஸ் ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கான பணியில் ரியல்மி நிறுவனம் களம் இறங்கியது.மேலும், ரியல்மி இந்தியாவின் தலைவரான மாதவ் ஷெத், அனைத்து மாடல்களும் 5G மொபைல் நெட்வொர்க்கில் வேலைசெய்யும் என்று ஏற்கனவே கூறியிருந்தார். 

மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகும் Redmi A1+

எனவே, ரியல்மி நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போனை அதிகளவில் இந்தியாவில் கொண்டு வருவதற்கு முழு முயற்சியாக இருப்பது தெரிகிறது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திற்குள்ளாக ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படலாம், இதில் டிமன்சிட்டி பிராசசர் இருக்கலாம். வரும் மாதங்களில் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios