Asianet News TamilAsianet News Tamil

மிகக்குறைந்த விலையில் அறிமுகமாகும் Redmi A1+

கடந்த மாதம் ரெட்மி A1 பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகமான நிலையில், அதற்கு அடுத்தபடியாக Redmi A1+ ஸ்மார்ட்போன் அக்டோபர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Redmi A1+ India launch set for October 14 check price specs and more
Author
First Published Oct 11, 2022, 6:46 PM IST

பட்ஜெட் ஸ்மார்ட்போனை கொண்டு வருவதில் நம்பர் ஒன் இடத்தில் ரெட்மி நிறுவனம் இருந்து வருகிறது. கடந்த மாதம் வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்கு ரெட்மி A1 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. 

இந்த நிலையில், தற்போது ரெட்மியின் மேம்பட்ட பதிப்பாக ரெட்மி A1+ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று ரெட்மி நிறுவனம் கூறியுள்ளது. அதன்படி, ரெட்மி A1+ ஸ்மார்ட்போனில் 6.52-இன்ச் HD+ LCD திரை மீடியாடெக் ஹீலியோ A22 SoC, ஆண்ட்ராய்டு 12 Go பதிப்பு, 8MP பின்பக்க கேமரா மற்றும் டெப்த் சென்சார், 5MP முன்பக்கக் கேமரா ஆகியவை இதில் உ்ளளது. மேலும், 10W சார்ஜிங் வசதியும், அதற்கு ஏற்ப 5000mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமிலும் ஹேக்கிங் கும்பல்.. உஷாரய்யா உஷாரு !

Redmi A1+ அம்சங்கள்:

பிராசசர்: 2GHz Quad-Core MediaTek Helio A22 12nm செயலி உடன் IMG PowerVR GE- GPU
மெமரி மற்றும் ரேம்: 2ஜிபி / 3ஜிபி LPDDR 4x ரேம், 32ஜிபி EMMC 5.1 இன்டர்னல் மெமரி, 512ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மெமரிகார்டு வசதி
இயங்குதளம்: Android 12 Go பதிப்பு
சிம்: இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்டி)
கேமரா: எல்இடி ஃப்ளாஷ், f/2.0 துளை, ஆழம் சென்சார் கொண்ட 8MP பின்புற கேமரா, 5MP முன் எதிர்கொள்ளும் கேமரா, f/2.2 துளை

பாதுகாப்பு அம்சம்: நீர்த்துளியில் இருந்து பாதுகாப்பு (P2i பூச்சு)
சென்சார்: பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் உள்ளது
கூடுதல் அம்சங்கள்: 3.5மிமீ ஆடியோ ஜாக், லவுட் ஸ்பீக்கர், FM ரேடியோ 

உலகிலேயே 16 இன்ச் திரையில், மிகக்குறைந்த எடையில் Acer லேப்டாப் அறிமுகம்!

பரிமாணங்கள்: 164.9x 76.75x 9.09mm,; எடை: 192 கிராம்
இரட்டை 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத் 5.0, GPS + GLONASS
10W சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி
Redmi A1+ வெளிர் நீலம், வெளிர் பச்சை மற்றும் கருப்பு வண்ணங்களில் அறிமுகமாக உள்ளது. இந்த வாரத்தின் பிற்பகுதியில் இது அறிமுகப்படுத்தப்படும். அப்போது இதன் விலை குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios