உலகிலேயே 16 இன்ச் திரையில், மிகக்குறைந்த எடையில் Acer லேப்டாப் அறிமுகம்!
ஏசர் நிறுவனம் உலகிலேயே எடை குறைவான 16 இன்ச் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
லேப்டாப் வர்த்தகத்தைப் பொறுத்தவரையில், அதன் சிறப்பம்சங்கள் எந்தளவு உள்ளதோ அதே போல், அதன் எடையும், திரை அளவும் முக்கிய பங்கு வகிக்கிறது. அண்மையில் ஷாவ்மி,ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்கள் மெல்லிதான லேப்டாப்களை அறிமுகம் செய்தன.
இந்த நிலையில், தற்போது ஏசர் நிறுவனம் உலகிலேயே குறைந்த எடை கொண்ட 16 இன்ச் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன் எடை 1.17 கிலோ ஆகும். கிட்டத்தட்ட வெறும் ஒரு கிலோ எடையில் ஒரு லேப்டாப், அதுவும் 16 இன்ச் திரை அளவுடன் இருப்பது இதுவே முதன்முறையாகும்.
இதில் AMD ரைசன் ப்ரோ 6000 சீரிஸ், AMD ரைசன் 6000 சீரிஸ் பிராசசர்கள் உள்ளன. திரைக்கும், பாடிக்குமான அளவு 92 சதவீதம் ஆகும். அதாவது பெசல் அளவு மிகக்சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
5G இருந்தும் பிரயோஜனம் இல்லை.. குமுறும் iPhone வாடிக்கையாளர்கள்.. Airtel விளக்கம்!
பயோ மெட்ரிக் சென்சார், வைஃபை 6, HDMI 2.1, இரண்டு USB 3.2 டைப் சி, இரண்டு USB டைப் ஏ ஆகியவை உள்ளன. மேலும் 54 WH பேட்டரியும் உள்ளது. இந்தியாவில் ஏசர் லைட் லேப்டாப்பின் விலை கிட்டத்தட்ட 1.5 லட்சத்திற்கு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் ஏசர் நிறுவனம் இந்த புதிய லேப்டாப் ஆனது, இந்தியாவில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த முழுமையான விவரங்கள் வெளிவரவில்லை. குறிப்பாக, 1.17 கிலோகிராம் எடையில் இருப்பதால், உலகிலேயே எடை குறைவான லேப்டாப் என்ற பெயரை பெற்றுள்ளது.