ரே-பேன் மற்றும் மெட்டா (Meta) இணைந்து இந்தியாவில் தங்களது புதிய Ray-Ban Meta Gen 2 ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரே-பேன் மற்றும் மெட்டா இணைந்து இந்தியாவில் தங்களது புதிய ஸ்மார்ட் கண்ணாடியான Ray-Ban Meta Gen 2 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்ணாடி ஆனது 3K ஆல்ட்ரா HD வீடியோ பதிவு, இரு மடங்கு அதிகமான பேட்டரி ஆயுள் மற்றும் மேம்படுத்தப்பட்ட Meta AI அம்சங்களுடன் வருகிறது. அதுமட்டுமன்றி, இந்த மாடலில் 48 மணி நேர சார்ஜ் கேஸ், அல்ட்ராவைட் HDR, மற்றும் வேகமான சார்ஜிங் வசதிகள் உள்ளன.
முக்கியமாக, இந்த கண்ணாடியில் ஹிந்தி மொழியில் Meta AI உடன் பேசும் திறன் கிடைக்கிறது. படிப்படியாக UPI Lite பணப்பரிவர்த்தனை வசதியும் இதில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரே-பேன் மெட்டா Gen 2 கண்ணாடியின் ஆரம்ப விலை ரூ.39,900 ஆகும். இந்தியாவின் பல ஆப்டிக்கல் கடைகளிலும் Ray-Ban India மையங்களிலும் வாங்கலாம். புதிய மாடல்கள் Wayfarer, Skyler, Headliner உள்ளிட்ட பிரபல வடிவங்களில் வந்துள்ளன.
இந்த ஆண்டின் நிறங்களில் காஸ்மிக் ப்ளூ, மிஸ்டிக் வயலட், ஆஸ்டிராய்டு கிரே போன்ற ஷைனி ஃபினிஷ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. Meta AI இப்போது மிகவும் புத்திசாலியாக மாற்றப்பட்டுள்ளது. “Hey Meta” என சொன்னால் உடனடி தகவல், பரிந்துரை, மற்றும் சுருக்கமான விளக்கங்கள் கிடைக்கும். மொத்த உரையாடலையும் தெளிவாகக் கேட்க Conversation Focus அம்சம் உதவுகிறது. முழுமையான ஹிந்தி ஆதரவு வழங்கப்படுகிறது.
மேலும், தீபிகா படுகோன் மற்றும் பலர் இடம்பெற்றுள்ள Celebrity AI Voice வசதியும் இதில் உள்ளது. விரைவில் பயனர் QR கோடிக்கு “Hey Meta, scan and pay” என்றால் நேரடியாக WhatsApp–இல் இணைந்த வங்கி கணக்கில் இருந்து UPI Lite கட்டணம் செலுத்தப்படும். கேமரா மற்றும் பேட்டரி ஆயுளிலும் பெரிய மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. 3K வீடியோவில் மிகவும் தெளிவான காட்சிகளை பதிவு செய்யலாம்.
பேட்டரி ஆயுள் 8 மணி நேரம் வரை நீடிக்கும். 20 நிமிடங்களில் 50% சார்ஜ் ஆகும். சார்ஜ் கேஸில் கூடுதல் 48 மணி நேர பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. விரைவில் Hyperlapse, Slow-motion போன்ற புதிய படப்பிடிப்பு முறைகளும் software update மூலம் கிடைக்கும்.


