Asianet News TamilAsianet News Tamil

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி - 39 ராக்கெட்….

pslv c 39
pslv c 39
Author
First Published Aug 31, 2017, 7:40 PM IST

இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க உதவும்,  பி.எஸ்.எல்.வி. சி39 ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது.

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., விண்வெளி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ஏழு செயற்கை கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' விண்ணில் செலுத்தி உள்ளது.

அதன்படி 'ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., - 1 எச்' என்ற செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., சி- 39 ராக்கெட் மூலம் திட்டமிட்டபடி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது.

pslv c 39

 இந்த ராக்கெட் மூலம் இயற்கை சீற்றம், பேரிடர் மேலாண்மை, கடல்சார் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். மேலும் இந்த ராக்கெட்டில் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட 320 டன் எடையும் 44.4 மீட்டர் உயரமும் கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1–H செயற்கைகோளாகும்.

pslv c 39

ஏற்கனவே, 7 செயற்கைகோள்களை திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதில் முதலில் செலுத்தப்பட்ட செயற்கைகோளின் ஆயுள் காலம் நிறைவடைய இருப்பதை தொடர்ந்து, புதிதாக 1,425 கிலோ எடை கொண்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.1–H செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. 

பூமியில் இருந்து குறைந்தபட்சம் 284 கிலோ மீட்டரிலும், அதிகபட்சம் 20 ஆயிரத்து 657 கிலோ மீட்டரிலும் நிலை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இஸ்ரோ சார்பில் 2018-ல் சந்திரயான் - 2 மற்றும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்- 3 வரிசையில் டி-2 என்ற அதிநவீன ராக்கெட் ஆகியவை விண்ணில் செலுத்துவதற்கான ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios