Chandrayaan-3: கடமையை முடித்து ஓய்வு எடுக்கும் ரோவர்! சந்திரயான்-3 முழுமையான வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு

சந்திரயான்-3 பயணத்தில் தனக்கு விதிக்கப்பட்ட பணிகளை முடித்த பிரக்யான் ரோவர் பாதுகாப்பாக Sleep Mode எனப்படும் ஓய்வு நிலைக்குச் சென்றுவிட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

Pragyan Rover completed its assignments, safely parked into Sleep mode: ISRO sgb

சந்திரயான்-3 பயணத்தில் பிரக்யான் ரோவர் திட்டமிட்ட பணிகளை முடித்துவிட்டது என்றும் இப்போது ரோவர் பாதுகாப்பாக Sleep Mode எனப்படும் ஓய்வு நிலைக்குச் சென்றுவிட்டது எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது.

பிரக்யான் ரோவரின் APXS மற்றும் LIBS ஆய்வுக் கருவிகளும் அவற்றின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளன. இந்தக் கருவிகள் மூலம் பதிவு செய்யப்பட்ட தரவுகள் அனைத்தும் விக்ரம் லேண்டர் மூலமாக பூமிக்கு அனுப்பப்பட்டுவிட்டன என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

மறு பயன்பாட்டுக்காக பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ள இஸ்ரோ, செப்டம்பர் 22, 2023 அன்று மீண்டும் நிலவில் பகல் பொழுது ஆரம்பிக்கிறது. அப்போது மறுபடியும் சூரிய உதயமானதும் ரோவரை திரும்ப இயக்க முடியலாம் எனவும் இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 வெற்றிக்கு உதவிய மசால் தோசை, பில்டர் காபி! விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்த இஸ்ரோ ஸ்பெஷல் கவனிப்பு!

அதே சமயத்தில் ரோவரும், லேண்டரும் தொடர்ந்து ரிசீவர் மூலம் கண்காணிக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22ஆம் தேதி மற்றொரு முறை ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதை எதிர்நோக்கி இருப்பதாவும், ரோவரை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியாவிட்டால், அது இந்தியாவின் தூதராக பிரக்யான் ரோவர் நிலவிலேயே எப்போதும் இருக்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

முன்னதாக, சனிக்கிழமை காலை இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் நிலவின் மேற்பரப்பில் உலாவியிருக்கிறது என்று தெரிவித்தது. இந்தப் பயணத்தில், நிலவில் பல்வேறு முக்கிய ஆய்வுத் தகவல்களைச் சேகரித்துள்ளது.

ரோவரில் உள்ள ஆல்பா பார்டிகல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோஸ்கோப் (APXS) என்ற கருவி நிலவில் கந்தகம் மற்றும் பிற சிறிய தனிமங்கள் இருப்பதையும் கண்டறிந்துள்ளது. இதன் மூலம் ஏற்கெனவே விக்ரம் லேண்டர் கண்டுபிடிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

122 வருடத்தில் இல்லாத வெப்பம்! இந்தியாவை வாட்டி வதைத்த மிக வறண்ட ஆகஸ்ட் மாதம்!

பிரக்யான் ரோவரில் உள்ள லேசர் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப் (LIBS) கருவி தென் துருவத்திற்கு அருகிலுள்ள நிலவின் மேற்பரப்பில் சல்பர் (S) இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியது.  அலுமினியம் (Al), சல்பர் (S), கால்சியம் (Ca), இரும்பு (Fe), குரோமியம் (Cr) மற்றும் டைட்டானியம் (Ti), மாங்கனீசு (Mn), சிலிக்கான் (Si) மற்றும் ஆக்ஸிஜன் (O) ஆகியவையும் நிலவில் இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.

விக்ரம் லேண்டரில் உள்ள ChaSTE பேலோட் மூலம் அளவிடப்பட்ட நிலவின் மேற்பரப்பு வெப்பநிலை மாறுபாட்டின் வரைபடத்தையும் இஸ்ரோ வெளியிட்டது. லேண்டரில் உள்ள மற்றொரு கருவி ILSA நிலவில் நில அதிர்வுகள் குறித்து பதிவு செய்துள்ளது. RAMBHA-LP என்ற ஆய்வுக் கருவி நிலவின் மேற்பரப்பில் பிளாஸ்மா இருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது.

இனிமே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் ப்ரீ இல்லையா? வசூல் செய்ய புது வழியை உருவாக்கும் மெட்டா!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios