விலை ரூ. 2.54 கோடி தான்.... இந்த போர்ஷே ஸ்போர்ட்ஸ் காரில் அப்படி என்ன தான் இருக்கு..?

புதிய போர்ஷே 718 கேமேன் GT4 RS மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது.

Porsche 718 Cayman GT4 RS Launched In India

முன்னணி ஸ்போர்ட்ஸ் கார் பிராண்டு போர்ஷே இந்தியாவில் தனது புது கேமேன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் கேமேன் GT4 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் சக்திவாய்ந்த ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். 

இந்த மாடல் போர்ஷே 718 கேமேன் GT4 RS  பெயரில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. புதிய போர்ஷே 718 கேமேன் GT4 RS  மாடல் விலை ரூ. 2 கோடியே 54 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போர்ஷே 718 கேமேன் ஸ்போர்ட்ஸ் காரின் ஹார்டுகோர் வெர்ஷன் ஆகும். 

என்ஜின் விவரங்கள்:

புதிய 718 கேமேன் GT4 RS  மாடலில் 911 GT3 சார்ந்த என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 4.0 லிட்டர் என்ஜினுக்கு மாற்றாக வழங்கப்பட்டு உள்ளது. தற்போதைய 911 GT3 மாடலுடன் ஒப்பிடும் போது,புதிய கேமேன் 718 GT4 RS  மாடலில் உள்ள ஃபிளாட் சிக்ஸ் என்ஜின் 496 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் வகையில் டி-டியுன் செய்யப்பட்டு உள்ளது. 

Porsche 718 Cayman GT4 RS Launched In India

இதே காரின் GT4 வெர்ஷனுடன் ஒப்பிடும் போது புதிய கேமேன் GT4 RS cாடலில் கூடுதலாக 79 ஹெச்.பி. பவர் மற்றும் 20 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை கிடைக்கிறது. மேலும் இந்த என்ஜினுடன் போர்ஷேவின் புதிய 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இது பின்புற  வீல்களுக்கான திறனை வெளிப்படுத்துகிறது.

அதிவேகம்:

புதிய போர்ஷே 718 கேமேன் GT4 RS மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு 315 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டுள்ளது. புதிய GT4 RS மாடல் ஸ்டாண்டர்டு GT4 மாடலை விட அரை நொடி வேகமானது ஆகும். எடையை பொருத்தவரை இந்த மாடல் ஃபுல் டேன்க் கொள்ளளவில் 1415 கிலோகிராம் எடையை கொண்டுள்ளது. இது GT4 மாடலை விட 35 கிலோ குறைவு ஆகும். 

Porsche 718 Cayman GT4 RS Launched In India

கார்பன் பைபர் பயன்பாடு காரணமாகவே காரின் எடை குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்த காரின் முன்புற பொனெட் மற்றும் விங்களில் கார்பன் பைபர் தான் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் புதிய போர்ஷே GT4 RS மாடலின் ஜன்னல்களில் குறைந்த எடை கொண்ட கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 

சேசிஸ்:

புதிய GT4 RS மாடலின் சேசிஸ்- இல் மாற்றங்கள் செய்யப்பட்டு புதிதாக பால் ஜாயிண்ட்கள் மூலம் சேசிஸ் முன்பை விட அதிக இறுக்கமாக பைண்ட் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் காரின் ஹேண்ட்லிங் பெருமளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அட்ஜஸ்ட் செய்யக்கூடிய சர்கியூட்-ரெடி சேசிஸ் உடன் RS ஷாக் அப்சார்பர் செட் அப், மாடிஃபைடு ஸ்ப்ரிங் மற்றும் ஆண்டி ரோல் பார் ரேட்கள் உள்ளன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios