Asianet News TamilAsianet News Tamil

PhonePe: இனி குழப்பம் இல்லை.. ஆதார் கார்டு நம்பர் வைத்தே இதை செய்யலாம்!

இந்தியாவில் ஆதார் எண்னை வைத்தே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை UPI கணக்கு தொடங்கும் முறையை முதன்முதலாக PhonePe கொண்டு வந்துள்ளது.

PhonePe first player to enable UPI activation with Aadhaar, check how to set aadhar based upi here
Author
First Published Nov 10, 2022, 11:51 AM IST

இந்தியாவில் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கூகுள் பே, போன் பே என ஸ்மார்ட்போன் செயலி மூலமாக வெறும் 1 ரூபாயிலிருந்து எளிதாக செலுத்த முடியும். இதனால் தள்ளுவண்டி கடை, பெட்டிக்கடை முதல், பெரிய பெரிய மால் வரையில் எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வந்துவிட்டது. 

இவ்வாறு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி UPI கணக்கு தொடங்கியிருக்க வேண்டும். அதன்பிறகே, மேற்கண்ட பலன்களைப் பெறமுடியும். இதனால், அடுத்தடுத்து வரும் புதிய பயனாளர்களுக்கு டெபிட் கார்டு பயன்டுத்தி UPI கணக்கு தொடங்குவதில் குழப்பங்கள் உள்ளன. 

இதை எளிமைப்படுத்தும் வகையில், ஆதார் கார்டு எண் மூலம் UPI கணக்கு தொடங்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு பயனார்கள் ஆதார் எண்னை உள்ளிட வேண்டும், பிறகு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு OTP வரும். OTP எண்னை எண்டர் செய்து உங்கள் ஆதாரை சரிபார்த்த பிறகு, நீங்கள் பயன்படுத்த விரும்பும் வங்கியின் விவரங்களை எண்டர் செய்தால் போதும். PhonePe UPI ஆக்டிவேட் ஆகிவிடும். 

விரைவில் கூகுள் பே, இதர டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளிலும் ஆதார் கார்டு அடிப்படையிலான UPI கணக்கு தொடங்குவதற்கான அம்சம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வந்த பிறகு, பொதுமக்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக செலவு செய்யவதாக கூறப்படுகிறது.

TRAI அறிக்கை எதிரொலி: Jio 4G ரீசார்ஜ் பிளான்களில் விரைவில் கட்டண உயர்வு?

ஆதார் கார்டு பயன்படுத்தி UPI ஆக்டிவேட் அமைப்பது எப்படி?

  • BHIM அல்லது Google Pay/PhonePe போன்ற UPI உள்ள செயலிகளைப் பதிவிறக்கவும்
  • UPI செயலி அமைப்பைத் தொடங்க, பதிவுசெய்து, உங்கள் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்
  • செயலியில் "UPI பின்னை அமை" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, புதிய UPI பின்னை அமைக்கவும்
  • இப்போது, நீங்கள் டெபிட் கார்டு மற்றும் ஆதார் ஆகிய இரண்டு முறைகளைப் பெறுவீர்கள்
  • சரிபார்ப்பின் அடிப்படையில் சரிபார்க்க "ஆதார்" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
  • "Accept" என்பதைக் கிளிக் செய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்
  • உங்கள் ஆதார் எண்ணின் முதல் ஆறு இலக்கங்களை உள்ளிட்டு, உறுதி என்பதை அழுத்தவும்
  • ஆதார் சரிபார்க்கப்பட்டதும், உங்கள் UPI பின்னை அமைக்கலாம்
  • UIDAI இலிருந்து உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அதை உள்ளிடவும்
  • OTP சரிபார்க்கப்பட்டதும், UPI பின்னை மீண்டும் உறுதிப்படுத்தவும்

இதை அமைத்தவுடன், உங்கள் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி BHIM மற்றும் பிற போன்ற UPI அம்ச செயலிகள் மூலம் பணம் செலுத்தலாம்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios