ஒப்போ நிறுவனத்தின் புத்தம் புதிய Oppo Reno 8T ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
ஸ்லீம்மான ஸ்டைலான ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமாக ஒப்போ இருந்து வருகிறது. ஒப்போ ஸ்மார்ட்போனின் மெல்லிதான கைக்கு அடைக்கமான அளவும், பளபளக்கும் தோற்றத்துடன் இதற்கு முன்பு வெளியான ஒப்போ ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஒப்போ நிறுவனத்தின் புத்தம் புதிய ரெனோ ஸ்மார்ட்போன் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பெயர் Oppo Reno 8T ஆகும். ஏற்கெனவே இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சில இணையதளங்களில் கசிந்தன. அதன்பிறகு, தற்போது அசல் அம்சங்கள் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஒப்போவின் அதிகாரப்பூர்வ தளத்தில் முழு விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனில் 120Hz 3D வளைந்த திரை, 108MP போர்ட்ரெய்ட் கேமரா, 1 பில்லியன் கலர்கள் கொண்ட டிஸ்ப்ளே, 67W சூப்பர் சார்ஜிங் வசதி என பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த புதிய ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனின் விலை 29,999 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அறிமுகத்தை முன்னிட்டு அறிமுக சலுகை, வங்கி சலுகைகள் இருக்கலாம் என்றும், இதற்கான முன்பதிவுகள் மதியம் 2 மணி முதல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக, Oppo Reno 8T 5G ஸ்மார்ட்போனானது வியட்நாமில் VND 9.9 மில்லியன் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.35,000 ஆகும். இது 8ஜிபி வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்போனுக்கான விலை. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் தற்போது அறிமுகமாகிய நிலையில், வியட்நாம் விலையை விட சற்று குறைவாகவே உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் பிளாக் மற்றும் டான் கோல்டு நிறங்களில் கிடைத்தது.
Xiaomi Pad 6, 6 Pro அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின!
ஒப்போ ரெனோ 8T 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்ங்கள்:
ஸ்மார்ட்போன் மாடல்: ஒப்போ ரெனோ 8T 5G
பிராசசர்: குவால்காம் SD 695 பிராசசர்
டிஸ்ப்ளே: 6.7 இன்ச், 120Hz அமொலெட் டிஸ்ப்ளே
ரேம்: 8ஜிபி
மெமரி: 128 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு:
கலர் ஓஎஸ் 13.0 - ஆண்ட்ராய்டு 13
கேமரா:
108 மெகா பிக்சல் பிரைமரி கேமரா,
2 மெகாபிக்சல் மைக்ரோ கேமரா,
2 மெகா பிக்சல் மோனோகுரோம் கேமரா
32 மெகா பிக்சல் முன் பக்க கேமரா
5ஜி பேண்டுகள்:
5G NR: n1/n3/n5/n7/n8/n20/n28/n38/n40/n41/n66/n77/n78 பேண்டுகள்
கூடுதல் அம்சங்கள்:
வைஃபை 802.11 ac (2.4GHz + 5Ghz), ப்ளூடூத் 5.1, GPS, A-GPS, BeiDou, GLONASS, Galileo, and QZSS, NFC
பேட்டரி சக்தி: 4800mAh, 67W SuperVOOC சார்ஜிங்.
