ஓப்போ தனது புதிய ஃபைண்ட் X9 மற்றும் ஃபைண்ட் X9 ப்ரோ மாடல்களை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ரோ மாடலில் 200MP Hasselblad கேமராவைக் கொண்டுள்ளது.
சீன மொபைல் பிராண்டான ஓப்போ (OPPO) இன்று தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தொடரான ஓப்போ ஃபைண்ட் X9 (Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் X9 ப்ரோ (Find X9 Pro) மாடல்களை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தொடரில் Android 16 அடிப்படையிலான ColorOS 16 இயங்குதளம் மற்றும் சக்திவாய்ந்த MediaTek Dimensity 9500 சிப் செட் இணைக்கப்பட்டுள்ளது. சிறப்பம்சமாக, இந்த இரண்டு மாடல்களிலும் 7000mAh-க்கும் அதிகமான பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியீடு மற்றும் விலை
இந்திய சந்தையில் ஓப்போ ஃபைண்ட் X9 தொடர் நவம்பர் மாத தொடக்கத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விலை குறித்து ஓப்போ இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால் விலை குறைப்பதற்காக இந்த மாடல்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வண்ணங்கள், ரேம் மற்றும் ஸ்டோரேஜ் வகைகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஓப்போ ஃபைண்ட் X9 ப்ரோ – முக்கிய அம்சங்கள்
ஓப்போ ஃபைண்ட் X9 ப்ரோ 6.78 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் உச்ச பிரகாசம் வழங்கப்படுகிறது. திரைக்கு Corning Gorilla Glass Victus 2 பாதுகாப்பு உள்ளது. இதை MediaTek Dimensity 9500 ப்ராசசர் இயக்குகிறது. இதில் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.
மேம்பட்ட கேமரா மற்றும் பேட்டரி
இந்த ப்ரோ மாடலில் 50MP Sony LYT 828 பிரதான சென்சார், 50MP அல்ட்ரா-வைட், மற்றும் 200MP Hasselblad டெலிஃபோட்டோ (13.2x ஜூம்) கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்காக 50MP முன் கேமரா உள்ளது. 7,500mAh பேட்டரி, 80W SuperVOOC வயர்டு சார்ஜர், மற்றும் 50W AirVOOC வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
ஓப்போ ஃபைண்ட் X9 – சிறப்பம்சங்கள்
ஓப்போ ஃபைண்ட் X9 மாடலில் 6.59 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 120Hz ரெஃப்ரெஷ் ரெட்டுடன், Gorilla Glass 7i பாதுகாப்புடன் வருகிறது. இந்த மாடலில் 12ஜிபி அல்லது 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. கேமரா பிரிவில் 50MP Sony LYT-808 பிரதான, 50MP அல்ட்ரா-வைட், மற்றும் 50MP டெலிஃபோட்டோ கேமராக்கள் உள்ளன. செல்ஃபிக்காக 32MP முன் கேமரா உள்ளது.
வடிவமைப்பு மற்றும் நிறங்கள்
ஓப்போ ஃபைண்ட் X9 மாடல் 7.99 மிமீ தடிமனுடன், 7,025mAh பேட்டரி, மற்றும் 80W வயர்டு + 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்தியாவில் இது டைட்டானியம் கிரே மற்றும் ஸ்பேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கும். ப்ரோ மாடல் டைட்டானியம் சார்கோல் மற்றும் சில்க் வைட் நிறங்களில் அறிமுகமாகும். இரண்டும் பிரீமியம் லுக் மற்றும் பவர் பாஃபார்மன்ஸ் இணைந்த மாடல்களாக பார்க்கப்படுகின்றன.
