உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI, இந்த ஆண்டின் இறுதியில் புதுடெல்லியில் தனது முதல் அலுவலகத்தைத் திறக்க உள்ளது. இந்தியாவில் ChatGPT பயன்பாடு வேகமாக வளர்ந்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஓபன்ஏஐ (OpenAI), இந்தாண்டின் இறுதியில் இந்திய தலைநகர் புதுடெல்லியில் தனது முதல் அலுவலகத்தைத் திறக்க இருப்பதாகஅறிவித்தார். இதன் மூலம் இந்தியாவில் அதிகாரப்பூர்வ வருகையை பதிவு செய்கிறது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் குறிப்பாக சாட்ஜிபிடி (ChatGPT) பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அமெரிக்காவுக்குப் பிறகு, இந்தியாவே ChatGPT-யின் இரண்டாவது பெரிய சந்தையாக இருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்திய பயனாளர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளனர்.
டெவலப்பர்களின் பங்களிப்பிலும் இந்தியா உலகின் முதல் 5 சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. குறிப்பாக மாணவர்கள் ChatGPT-யை அதிக அளவில் பயன்படுத்தும் நாடாக இந்தியா முன்னணியில் உள்ளது. இதுவே OpenAI-க்கு இந்தியாவில் வலுவான தளமாக அமைகிறது.
ஏற்கனவே இந்தியாவில் ஒரே ஒருவராக பணியாற்றி வந்தவர் பிரக்யா மிஸ்ரா, இவர் கடந்த வருடம் OpenAI-யில் இணைந்து பொது கொள்கை மற்றும் கூட்டாண்மை பிரிவை வழிநடத்தி வருகிறார். இப்போது, நிறுவனம் மேலும் பணியாளர்களை நியமித்து தனது குழுவை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.
OpenAI, இந்திய அரசின் IndiaAI Mission (மொத்தம் $1.2 பில்லியன் மதிப்பிலான திட்டம்) உடன் கூட்டாண்மை செய்து, உள்ளூர் மொழி மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்கிறது உள்ளது. இது மாணவர்கள், டெவலப்பர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கும்.
மேலும், விரைவில் இந்தியாவில் தனது முதல் டெவலப்பர் தின நிகழ்வையும் OpenAI நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தொழில்நுட்ப நிபுணர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் புதுமையாளர்கள் நேரடியாக பயனடையலாம்.
இந்த விரிவாக்கம், இந்தியாவில் உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு விதிமுறைகளில் OpenAI தனது பங்களிப்பை அதிகரிக்க உதவும். உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, எதிர்கால AI வளர்ச்சிக்கான மிகப்பெரிய சந்தையாகக் கருதப்படுகிறது.
