டாப் டக்கர் அம்சங்களுடன் நார்டு CE 2 5ஜி அறிமுகம் - விலை இவ்வளவு தானா?

ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விவரங்களை பார்ப்போம்.

OnePlus Nord CE 2 5G with up to 8GB RAM launched in India

ஒன்பிளஸ் நிறுவனம் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது நார்டு CE சீரிசில் இரண்டாவது மாடல் ஆகும். இதில் 6.43 இன்ச் FHD+ ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நார்டு CE 2 5ஜி மாடலில் ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், அதிகபட்சம் 8 5ஜி பேண்ட்களுக்கான வசதி கொண்டிருக்கிறது. 

இந்த போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 11 கொண்டிருக்கிறது. இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு சாஃப்ட்வேர் அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டு உள்ளளன. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆக்சிஜன் ஓ.எஸ். 12 வசதி இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் வழங்கப்பட இருக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க நார்டு CE 2 5ஜி மாடலில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் 4500mAh பேட்டரி, 65 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 32 நிமிடங்களில் முழுமையாக  சார்ஜ் செய்து விடலாம்.

OnePlus Nord CE 2 5G with up to 8GB RAM launched in India

ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி அம்சங்கள்

- 6.43 இன்ச் FHD+ ஃபுளூயிட் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 6nm பிராசஸர் 
- மாலி-G68 MC4 GPU
- 6GB / 8GB LPDDR4X ரேம்
- 128GB UFS 2.2 மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 11.3
- டூயல் சிம் 
- 64MP பிரைமரி கேமரா, f/1.79, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.4
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 4500mAh பேட்டரி
- 65 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் 

ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடல் கிரே மிரர் மற்றும் பஹாமா புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 23,999 என்றும் 8GB ரேம், 256GB மெமரி மாடல் விலை ரூ. 24,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஒன்பிளஸ் வலைதளம், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், அமேசான் வலைதளம், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் பிப்ரவரி 22 ஆம் தேதி துவங்குகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios