OnePlus Nord CE 2 5G Price : வெளியீட்டுக்கு முன் லீக் ஆனது! ஒன்பிளஸ் போன் விலை இவ்வளவு தானா?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் நிற ஆப்ஷன்கள் பற்றிய விவரம் வெளியாகி உள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 17 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த நார்டு CE 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். புதிய ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்பட இருக்கிறது. அறிமுகமாக சில தினங்களே இருக்கும் நிலையில், ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் நிற ஆப்ஷன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
அதன்படி ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போனின் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 23,999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 25,999 என நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பஹாமா புளூ மற்றும் கிரே மிரர் நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அறிமுக நிகழ்வை தொடர்ந்து விற்பனையும் இதே வாரம் துவங்கிவிடும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடலில் 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90HZ ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 6GB மற்றும் 8GB ரேம், 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது சென்சார், 2MP டெரிடரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் விலை பற்றி ஒன்பிளஸ் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை.