OnePlus Nord CE 2 5G : பிப். 17-இல் நார்டு CE 2 5ஜி - மிட் ரேன்ஜ் மாடல் வெளியீட்டை அறிவித்த ஒன்பிளஸ்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அடுத்த வாரம் வெளியாகும் என அறிவித்து இருக்கிறது.

OnePlus Nord CE 2 5G India Launch Date Set for February 17

ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்ரவரி 17 ஆம் தேதி அறிமுகம்  செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிசைனை ஒன்பிளஸ் டீசராக வெளியிட்டு உள்ளது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆகும். இந்த மாடலில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போன் அந்நிறுவன வலைதளத்தின் சோர்ஸ் கோடில் இடம்பெற்றும் இருந்தது.

இதுதவிர பி.ஐ.எஸ். வலைதளத்திலும் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் பட்டியலிடப்பட்டன. அந்த வரிசையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி வெளியீட்டு தேதி ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது. இத்துடன் டீசர் வீடியோவும் இணைக்கப்பட்டு இருக்கிறது. 

OnePlus Nord CE 2 5G India Launch Date Set for February 17

முந்தைய தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு CE 2 5ஜி மாடல் 6GB மற்றும் 8GB ரேம், 128GB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்பட்டது. இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.4 இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90HZ ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP இரண்டாவது சென்சார், 2MP டெரிடரி கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் விலை பற்றி ஒன்பிளஸ் இதுவரை எந்த தகவலையும் வழங்கவில்லை. வரும் நாட்களில் அம்சங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படலாம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios