150 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் EV ஸ்கூட்டர்... ரூ. 75 ஆயிரம் விலையில் அறிமுகம்.. இவ்வளவு அம்சங்களா?
இந்திய சந்தையில் புது மாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகப்படுத்த ஒடிசி திட்டமிட்டு இருக்கிறது.
மும்பையை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான ஓடிசி இந்திய சந்தையில் V2 மற்றும் V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய ஒடிசி V2 மாடல் விலை ரூ. 75 ஆயிரம் என்றும் ஓடிசி V2 பிளஸ் மாடல் விலை ரூ. 97 ஆயிரத்து 500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
ஒடிசி V2 மற்றும் ஒடிசி V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை சேர்த்து மொத்தம் ஆறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஒடிசி நிறுவனம் விற்பனை செய்கிறது. இதை அடுத்து இந்தியாவில் தனது டீலர் நெட்வொர்க்-ஐ நூற்றுக்கும் அதிகமாக உயர்த்த ஒடிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புது மாடல்கள் வெளியீட்டை தொடர்ந்து எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகப்படுத்த ஒடிசி திட்டமிட்டு இருக்கிறது.
ரேன்ஜ் விவரங்கள்:
ஸ்கூட்டர் உற்பத்தியை அதிகப்படுத்த ஆமதாபாத், மும்பை மற்றும் ஐதராபாத் நகரங்களை தொடர்ந்து மேலும் சில பகுதிகளில் உற்பத்தி ஆலைகளை கட்டமைக்க ஒடிசி நிறுவனம் முடிவு செய்து உள்ளது. புதிய ஒடிசி V2 மற்றும் V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67 தர வசதி கொண்ட பேட்டரிகள் உள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் முழு சார்ஜ் செய்தால் 150 கி.மீ. ரேன்ஜ் வழங்குகின்றன.
ஒடிசி V2 மற்றும் V2 பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் பல்வேறு விதமான நிறங்களில் கிடைக்கின்றன. இத்துடன் ஆண்டி தெஃப்ட் லாக், பேசிவ் பேட்டரி கூலிங், ஆம்பில் பூட் ஸ்பேஸ், 12 இன்ச் முன்புற டையர், எல்.இ.டி. லைட்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளன. இரண்டு புதிய ஸ்கூட்டர்கள் மட்டும் இன்றி ஒடிசி நிறுவனம் E2கோ, ஹாக் பிளஸ், ரேசர் மற்றும் எவோகிஸ் என நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.