MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • டெக்னாலஜி
  • நம்பமுடியாத விலையில் ஆண்டு இறுதி ஆஃபர்! Pixel வாங்க இதுதான் சரியான நேரம்!

நம்பமுடியாத விலையில் ஆண்டு இறுதி ஆஃபர்! Pixel வாங்க இதுதான் சரியான நேரம்!

கூகுள் தனது ஆண்டு இறுதி விற்பனையை இந்தியாவில் அறிவித்துள்ளது, இதில் புதிய பிக்சல் 10 சீரிஸ் போன்களுக்கு பெரும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. பிக்சல் 9 சீரிஸ் போன்களும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.

2 Min read
Raghupati R
Published : Dec 16 2025, 04:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
பிக்சல் 10 சீரிஸ் தள்ளுபடி
Image Credit : Google

பிக்சல் 10 சீரிஸ் தள்ளுபடி

கூகுள் நிறுவனம் இந்தியாவில் தனது ஆண்டு இறுதி விற்பனையை (Google End of Year Sale) தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில், புதிய பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலையில் பெரிய அளவில் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிக்சல் 10, பிக்சல் 10 Pro, பிக்சல் 10 Pro XL மற்றும் பிக்சல் 10 Pro Fold போன்ற மாடல்களுக்கு வங்கிச் சலுகைகள், EMI ஆப்ஷன்கள் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன்களுடன் மட்டுமல்லாமல், பிக்சல் Watch 3 மற்றும் பிக்சல் Buds போன்ற ஆக்சஸரீஸ்களுக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஜனவரி 2026 தொடக்கம் வரை மட்டுமே செல்லுபடியாகும்.

இந்த ஆண்டு இறுதி விற்பனையில் HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI மூலம் பிக்சல் 10 வாங்கினால் ரூ.7,000 வரை உடனடி கேஷ்பேக் கிடைக்கிறது. பிக்சல் 10 Pro, Pro XL மற்றும் Pro Fold மாடல்களில் ரூ.10,000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதற்கு மேலாக, வாடிக்கையாளர்கள் 24 மாதங்கள் வரை நோ-காஸ்ட் EMI வசதியையும் பயன்படுத்தலாம். இந்த வங்கி சலுகைகள் 2026 ஜனவரி 2, இரவு 11:59 மணி வரை செல்லுபடியாகும் என கூகுள் தெரிவித்துள்ளது.

22
கூகுள் ஆண்டு இறுதி விற்பனை
Image Credit : Google

கூகுள் ஆண்டு இறுதி விற்பனை

மேலும், பிக்சல் 9 சீரீஸ் போன்களிலும் இந்த விற்பனையில் விலை குறைக்கப்பட்டுள்ளது. பிக்சல் 9 இப்போது ரூ.79,999க்கு பதிலாக ரூ.58,399 எந்த விலையில் கிடைக்கிறது. பிக்சல் 9 Pro Fold மாடல் ரூ.1,62,999 ஆகவும், பிக்சல் 9a மாடல் ரூ.44,999 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த பட்ஜெட்டில் ப்ரீமியம் பிக்சல் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு இந்த விலைகள் மிகவும் ஈர்க்கக்கூடியவையாக உள்ளன. கூகுள் ஆக்சசெரீஸ்களிலும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிக்சல் Watch 3-ன் விலை சுமார் ரூ.5,000 குறைக்கப்பட்டு, தற்போது ரூ.22,915க்கு கிடைக்கிறது. மேலும், பிக்சல் Buds Pro 2 இப்போது ரூ.19,900 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், பிக்சல் 10 சீரிஸ் ஆகஸ்ட் 20 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போன்கள் அனைத்தும் கூகுளின் புதிய டென்சர் 5 சிப்செட் மூலம் இயங்குகின்றன. AI அம்சங்கள் மற்றும் கேமரா செயல்திறனில் கவனம் செலுத்தும் இந்த சீரியஸ், தற்போதைய தள்ளுபடியில் வாங்க சிறந்த நேரமாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
12.1 இன்ச் திரை, 10,200mAh பேட்டரி… எல்லாம் ஒரே டேப்லெட்டில்! Lenovo Idea Tab Plus விலை?
Related image2
புத்தாண்டுக்கு முன்பு ரீசார்ஜ் விலை அதிகரிக்கும்.? அதிர்ச்சியில் ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்கள்

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கூகிள்
தொழில்நுட்பம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
12.1 இன்ச் திரை, 10,200mAh பேட்டரி… எல்லாம் ஒரே டேப்லெட்டில்! Lenovo Idea Tab Plus விலை?
Recommended image2
எலான் மஸ்க்கிற்கே தண்ணி காட்டுாரா சாம்? விண்வெளியில் ஆரம்பமாகும் மெகா யுத்தம்.. பரபரக்கும் பின்னணி!
Recommended image3
மாணவர்களே உஷார்.. உங்க பேரை பார்த்தாலே AI மார்க்கை குறைக்குதாம்! வெளியான அதிர்ச்சி தகவல்
Related Stories
Recommended image1
12.1 இன்ச் திரை, 10,200mAh பேட்டரி… எல்லாம் ஒரே டேப்லெட்டில்! Lenovo Idea Tab Plus விலை?
Recommended image2
புத்தாண்டுக்கு முன்பு ரீசார்ஜ் விலை அதிகரிக்கும்.? அதிர்ச்சியில் ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved