Youtube Update: அடேங்கப்பா.. இனி வீடியோவை கூட ஜூம் செய்து பார்க்கலாம்!

பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூபில், இனி நீங்கள் பார்க்கும் வீடியோக்களை ஜூம் செய்து பார்க்கும் வகையில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது.

Now zoom in on a YouTube video while watching: Here is how

கூகுளின் வீடியோ தளமான யூடியூப் பல புதிய அம்சங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக யூடியூபிற்கு புதிய தோற்றத்தையும், ஜூம் செய்யும் வசதியையும் கொண்டுவந்துள்ளது. 

ஜூம் செய்து பார்க்கும் அம்சம்:

யூடியூப் தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த அம்சம் தான் எதிர்பார்க்கப்பட்டது. ஒரு இமெஜே ஜூம் செய்து பார்ப்பது போல், வீடியோவையும் ஜூம் செய்ய முடியாத சூழல் இருந்து வந்தது. மேலும், வீடியோவை ஜூம் செய்வதற்காக தனியாக மென்பொருள், மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது. 

இப்படியான நிலையில், ஜூம் செய்யும் அம்சத்தை நேரடியாக யூடியூப் தளத்திலே கொண்டு வரப்பட்டுள்ளதால், பயனர்கள் மத்தியில் மிகப்பெறும் வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக 1080P, 4K வீடியோக்களை எளிமையாக ஜூம் செய்து பார்க்கலாம். 

எப்படி ஜூம் செய்ய வேண்டும்:

பிஞ்ச் டு ஜூம் மூலம், பயனர்கள் இப்போது வீடியோவை எளிதாக ஜூம் செய்து பார்க்கலாம். இந்த அம்சம் iOS மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலும் கிடைக்கும். எனவே, எந்தவொரு மூன்றாம் தரப்பு ஆப்பையும் பயன்படுத்தாமலே, எளிமையாக ஜூம் செய்யலாம்.

Facebook யூஸ் பண்றிங்களா ? உடனே இதை செய்யுங்கள்

எளிமையாக தேடும் வசதி:

யூடியூபில் குறிப்பிட்ட ஒரு பகுதியை எளிமையாகத் தேடுவதற்காக Precise seeking என்ற அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, யூடியூப் வீடியோவின் அடியில் தோன்றும் டைம்லைனை அழுத்திப் பிடித்தால் போதும், அந்த வீடியோவிலுள்ள ஃபிரம்கள், அடுத்த காட்சிகள், முந்தைய காட்சிகள் அனைத்தும் சிறிய அளவில் தோன்றும். 

இதன் மூலம், வீடியோவில் நமக்குத் தேவையான பகுதியை உடனடியாகப் பார்க்க முடியும். மாறாக முழு வீடியோவையும் பார்க்க வேண்டிய அம்சம் இல்லை. டுடோரியல் அல்லது கல்வி சார்ந்த வீடியோக்களைப் பார்க்கும் பயனர்களுக்கு இந்த அம்சம் கைகொடுக்கும். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios