இனி ட்விட்டரில் 2 மணி நேர வீடியோவை பதிவேற்றலாம்.. ஆனால் இந்த பயனர்கள் மட்டும் தான்

ப்ளூ டிக் ட்விட்டர் பயனர்கள் 2 மணி நேர வீடியோவை பதிவேற்றலாம் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Now you can upload a 2 hour video on Twitter.. but only for these users

எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே,  நிர்வாகம் மற்றும் ட்விட்டர் தளத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டர் பணியாளர்களின் குறைத்த எலான் மஸ்க், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்தார்.

அந்த வகையில் நீண்ட வீடியோ பதிவேற்றங்களை ஆதரிக்கவும், வீடியோ பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. டிவிட்டர் நிறுவனம்  டிசம்பரில் நீண்ட வீடியோ பதிவேற்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இதையும் படிங்க : பாதி விலையில் சினிமா பிளஸ் ஓடிடி பிளான்! பிஎஸ்என்எஸ் வழங்கும் புதிய் ஆஃபர்!

தற்போது புதிய அப்டேட்டை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மற்ற சமூக ஊடக தளங்களுக்கு ஏற்ப ட்விட்டரை மேம்படுத்தும் அம்சங்களில் ஒன்றாக, ப்ளூ டிக் ட்விட்டர் பயனர்கள் 2 மணி நேர வீடியோவை பதிவேற்றலாம் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்பு 60 நிமிட வீடியோவை பதிவேற்ற முடியும் என்ற வரம்பு இருந்த நிலையில் தற்போது அதை 2 மணி நேர வரம்பாக மாற்றி உள்ளார். மேலும் ப்ளூ டிக் பயனர்களுக்கான வீடியோ கோப்பு அளவு வரம்பு 2ஜிபியில் இருந்து 8ஜிபியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட வீடியோ பதிவேற்ற அம்சத்தைப் பயன்படுத்தி, பாட்காஸ்ட் போன்ற நிகழ்ச்சிகள் ட்விட்டரில் தங்கள் அத்தியாயங்களைப் பதிவேற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.. மேலும் முழு நீள திரைப்படங்களையும் ட்விட்டரில் நேரடியாக சில பதிவேற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி ஆபாச கிளிபுகளும் அதிகமாக பதிவேற்றப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : Gmail : உங்க Gmail கணக்கு எல்லாத்தையும் டெலிட் செய்கிறது கூகுள்.. தப்பிப்பது எப்படி தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios