வாட்ஸ் ஆப் பயன்படுத்தாதவர்கள் இனி இருப்பார்களா ? என கேள்வி எழும் அளவிற்கு அதன் பயன்பாடு  மக்களை திசை திருப்பிள்ளது. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதற்கேற்ப, எந்த வசதி  இல்லை வாட்ஸ் ஆப்பில் என கேள்வி கேட்கும் அளவிற்கும் உயர்ந்து விட்டது வாட்ஸ் ஆப்.

அபரிவிதமான வளர்ச்சியை கண்ட வாட்ஸ் அடுத்தக்கட்டமாக, UPI  PAYMENTS வசதியை இம்மாத  இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக, இனி வரும் காலங்களில் அனைத்து  பரிமாற்றங்களும் இனி ஆன்லைன் தான் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனை புரிந்துகொண்ட வாட்ஸ் ஆப் நிறுவனம், அதற்கான பிள்ளையார் சுழியை போட்டு சில மாதங்கள் ஆகின்றன. இன்னும் சொல்லப்போனால் ஆர்பிஐ யின், சிலவிதிமுறைகளை பின்பற்றும் பணியில் ஆயத்தமாகி வருகிறது வாட்ஸ் ஆப்.

இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், வாட்ஸ் ஆப் சாட்மூலமாகவே ஒரு வங்கி கணக்கிலிருந்து, மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாறிக்கொள்ளளலாம் என்பது குறிப்பிடத்தக்கது