ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கும் நத்திங்... முதல் மாடல் எப்போ வெளியாகுது தெரியுமா?
லண்டனை சேர்ந்த நத்திங் நிறுவனம் தனது நத்திங் 1 போனின் அறிமுக நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது.
நத்திங் போன் 1 வெளியீட்டு தேதி ஜூலை 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஒன்பிளஸ் இணை நிறுவனர் கார்ல் பெய் துவங்கிய நத்திங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். லண்டனை சேர்ந்த நத்திங் நிறுவனம் தனது நத்திங் 1 போனின் அறிமுக நிகழ்வு விர்ச்சுவல் முறையில் நடைபெற இருக்கிறது. நத்திங் போன் 1 மாடல் டிரான்ஸ்பேரண்ட் பேக் கொண்டு இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஸ்மார்ட்போனில் உள்ள பாகங்களை அனைவரும் பார்க்கக்கூடிய வகையில் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் நத்திங் போன் 1 மாடல் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் ஆண்ட்ராய்டு சார்ந்த நத்திங் ஒ.எஸ். மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
நத்திங் போன் 1 மாடல் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு இரவு 8.30 மணிக்கு துவங்க இருக்கிறது. ஸ்மார்ட்போனின் அறிமுக நிகழ்வு நத்திங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரலை செய்யப்பட உள்ளது. ஸ்மார்ட்போன் வெளியீடு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள விரும்புவோர் நத்திங் வலைதளத்தில் நோட்டிபிகேஷன் வடிவில் பெற முடியும்.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
புதிய நத்திங் போன் 1 மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர், ஆண்ட்ராய்டு சார்ந்த நத்திங் ஓ.எஸ்., 6.55 இன்ச் OLED டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், ஃபிளாட் எட்ஜ்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர நத்திங் போன் 1 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் மற்ற அம்சங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. டிசைனை பொருத்தவரை நத்திங் போன் 1 மாடல் நத்திங் இயர் 1 போன்றே காட்சி அளிக்கும் என தெரிகிறது.