Asianet News TamilAsianet News Tamil

இஸ்ரோவில் பாலின பாகுபாடு இல்லை: ஆதித்யா எல்1 திட்ட இயக்குநர் நிகர் ஷாஜி உறுதி

நிகர் ஷாஜி,  "இஸ்ரோவில் பெண்களுக்கு எந்தத் தடையும் இல்லை" என்று கூறியுள்ளார். இஸ்ரோவில், திறமை மட்டுமே முக்கியம் என்றும், பாலினம் பாகுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No Gender Bias At ISRO, Only Talent Matters: Woman Behind Aditya L1 Mission sgb
Author
First Published Jan 6, 2024, 7:47 PM IST

ஆதித்யா எல்1 வெற்றிகரமாக L1 புள்ளியை அடைந்துள்ள நிலையில், இத்திட்டத்தின் இயக்குநர் நிகர் ஷாஜி இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் பெண்களிடம் பாலின பாகுபாடு காட்டப்படுவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டையில் பிறந்த நிகர் ஷாஜி பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு பகுதியான யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் விஞ்ஞானி ஆவார். சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா எல்1 பயணத்தின் திட்ட இயக்குநராக உள்ளார்.

ஆதித்யா எல்1 விண்கலம் விண்வெளியில் நான்கு மாதங்களுக்கும் மேலான நீண்ட பயணத்துக்குப் பின், 3.7 மில்லியன் கிமீக்கு மேல் பயணித்து பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ள L1 புள்ளியை அடைந்துள்ளது.

இந்நிலையில் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ள நிகர் ஷாஜி,  "இஸ்ரோவில் பெண்களுக்கு எந்தத் தடையும் இல்லை" என்று கூறியுள்ளார். இஸ்ரோவில், திறமை மட்டுமே முக்கியம் என்றும், பாலினம் பாகுபாடு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் ஆதித்யா எல்1 எத்தனை ஆண்டுகள் செயல்படும்? என்னென்ன ஆய்வுகள் செய்யும்?

No Gender Bias At ISRO, Only Talent Matters: Woman Behind Aditya L1 Mission sgb

ஆதித்யா எல்1 திட்டத்துக்காக ஒன்பது ஆண்டுகளாக அயராது உழைத்த நிகர் ஷாஜி, "ஆதித்யா ஒரு சிக்கலான அறிவியல் செயற்கைக்கோள்" என்று கூறுகிறார். "வெவ்வெறு  பணிகளைச் செய்யும் பல இந்திய அறிவியல் நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரிவது சவாலாக இருந்தது" என்றும் அவர் கூறுகிறார்.

அவர் ஒரு பொறியியலாளர் ஆவதற்குத் தூண்டியது தந்தைதான் என்கிறார். கணிதப் பட்டதாரியான திருமதி நிகரின் தந்தை ஷேக் மீரான் ஒரு விவசாயி. தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை கிராமத்தில் பிறந்து வளர்ந்த நிகர், நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியைப் பற்றி அறிந்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை செய்ய ஆர்வம் கொண்டதாகச் சொல்கிறார்.

நிகர் ஷாஜி ஒரு டாக்டராக வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் விரும்பினர். ஆனால் அவர் ஒரு பொறியியலாளராக முடிவு செய்தார்.

ஆரம்பக் கல்வி அரசுப் பள்ளியில்தான் படித்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பகுதியாக இருந்த திருநெல்வேலியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில்  எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் துறையில் பொறியியல் பட்டம் பெற்றார். பின்னர், பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மெஸ்ராவில் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

முன்னதாக, சந்திரயான்-2 திட்டத்திற்கு எம். வனிதா தலைமை தாங்கினார். பூமியைப் படம் பிடிக்கும் செயற்கைக்கோள் தயாரிப்பில் தேன்மொழி செல்வி தலைமை தாங்கினார். கல்பனா சந்திரயான்-3 திட்டத்தின் துணை திட்ட இயக்குநராகப் பணிபுரிந்தார்.

L1 புள்ளியை அடைந்து சாதனை படைத்த இஸ்ரோவின் ஆதித்யா எல்1

Follow Us:
Download App:
  • android
  • ios