ட்விட்டர் தலைமையகத்தில் புதிய லோகோ இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே, நிர்வாகம் மற்றும் ட்விட்டர் தளத்தில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். அதன்படி ட்விட்டர் பணியாளர்களின் குறைத்த எலான் மஸ்க், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் பெற கட்டணம் செலுத்தும் நடைமுறையையும் கொண்டு வந்தார். அதிகளவிலான பணிநீக்கங்கள் முதல் புதிய தலைமை நிர்வாக அதிகாரியை நியமித்தல் வரை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். 

அந்த வகையில் தற்போது ட்விட்டர் லோகோ மற்றும் பெயரைமாற்ற எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். ட்விட்டர் என்றாலே நமக்கு நீலப் பறவை லோகோ தான் உடனடியாக நினைவுக்கு வரும். ஆனால், அது விரைவில் மாறப்போகிறது. எலான் மஸ்க் புதிய ட்விட்டர் லோகோவைத் தேர்ந்தெடுத்துள்ளார், அதாவது நீலப் பறவைக்கு பதிலாக X என்ற புதிய லோகோவை அறிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு எலான் மஸ்க் தனது 149 மில்லியன் பின்தொடர்பவர்களிடம் புதிய லோகோவிற்கான யோசனைகளைச் சமர்ப்பிக்கச் சொன்னார். பின்னர் அவர் சமர்ப்பிப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தனது சுயவிவரப் புகைப்படத்தை X என்று மாற்றினார். மேலும் ட்விட்டர் பெயரையும் X என்று மாற்றி உள்ளார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் குருவிக்கு பதில் X லோகோ மாறுவது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Scroll to load tweet…

ட்விட்டர் தலைமையகத்தில் புதிய லோகோ இடம்பெற்றிருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

Scroll to load tweet…

முன்னதாக எலான் மஸ்க் ஒரு நபர் ஒரு நாளில் படிக்கக்கூடிய ட்வீட்களின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

WhatsApp : வந்தாச்சு புது வசதி.. வாட்ஸ்அப் வெளியிட்ட மாஸ் அப்டேட் - இனி அந்த பிரச்சனை கிடையாது தெரியுமா.!