Asianet News TamilAsianet News Tamil

ஆன்லைனில் ஷாப்பிங் செய்கிறீர்களா? போலி OTP மூலம் அதிகரிக்கும் நூதன மோசடி

ஆன்லைன் ஷாப்பிங்கில் தற்போது புதுவிதமான மோசடி முறை அதிகரித்து வருகிறது. அது எந்தவிதமான மோசடி, அதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

New type of Scam Beware of fake OTP delivery scam or you will lose money
Author
First Published Dec 28, 2022, 5:34 PM IST

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் பயனர்கள், தாங்கள் ஆர்டர் செய்த பொருள் தான் டெலிவரி செய்யப்படுகிறதா என்பதை சரிபார்ப்பதற்காக OTP முறை டெலிவரி வந்துள்ளன. இந்தச் செயல்பாட்டில், வாடிக்கையாளர்கள் தங்களின் டெலிவரி பேக்கேஜைச் சரிபார்த்த பிறகு, டெலிவரி ஏஜென்டிடம் OTP வழங்க வேண்டும். இந்த OTP முறையிலான டெலிவரி ஒரு பாதுகாப்பான வழியாக மாறியுள்ளது. இருப்பினும், மறுபுறம் இது மற்றொரு ஆன்லைன் மோசடிக்கும் வழி வகுத்ததுள்ளது.

மக்களை குறிவைக்க எப்போதும் புதிய வழிகளைத் தேடும் மோசடி கும்பல்,  இப்போது டெலிவரி ஏஜென்ட்களாக மாறுவேடமிட்டு மக்களிடமிருந்து பணத்தைத் திருடுகிறார்கள். இதுதொடர்பாக கிடைத்த தகவலின்படி, மோசடி கும்பல்கள் டெலிவரி ஏஜென்ட்களாக வீட்டுவந்து, டெலிவரிக்கு முன் மக்களிடம் OTP கேட்கிறார்கள். பொதுமக்களும் ஏதோ டெலிவரி வந்துள்ளதாக எண்ணி, OTP கொடுக்கிறார்கள். அவ்வளவுதான், OTP ஐப் பெற்றவுடன்,  மோசடி செய்பவர்கள் தங்கள் மொபைலை குளோன் செய்து விடுவார்கள் அல்லது வங்கிக் கணக்குகள் போன்ற முக்கியமான தரவுகளுக்கான அணுகலைப் பெறுவார்கள்.

போலி OTP டெலிவரி மோசடி என்றால் என்ன?

மோசடி கும்பல்கள் ஆன்லைனில் நிறைய ஷாப்பிங் செய்யும் நபர்களை குறிவைத்து மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள். டெலிவரி பேக்கேஜ்களை அடிக்கடி பெறுபவர்களை நோட்டமிட்டு, டெலிவரி ஏஜென்ட்கள் போல் நடித்து அவர்களின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் அல்லது பிற கூரியர் சர்வீஸ் ஏஜென்ட் போல் பெரிய பெரிய பொட்டலங்கள் அடங்கிய பேக்கேஜ்களை தூக்கிக் கொண்டு வருவார்கள். 

ஸ்மார்ட்போன் பேட்டரிகளை இனி ஈஸியாக மாற்றிக்கொள்ளலாம்! வருகிறது புதிய விதிமுறை?

மேலும், இது பே-ஆன் டெலிவரி பார்சல் என்று கூறி பணம் கேட்பார்கள். சம்பந்தப்பட்ட நபர் டெலிவரி பேக்கேஜைப் பெற மறுத்தால், டெலிவரியை ரத்து செய்வது போல் செயல்படுவார்கள். மேலும், அவ்வாறு டெலிவரியை ரத்து செய்வதற்கும் OTP கேட்கிறார்கள். இதை உண்மை என்று நம்பி பொதுமக்கள் ஏமாந்து OTP கொடுத்துவிடுகிறார்கள். 

சில சமயங்களில், இந்த மோசடி கும்பல் பக்கத்து வீட்டுக்கு கூட சென்று, OTP அல்லது சம்பந்தப்பட்டவர்களின் சார்பாக பணம் செலுத்தும்படி கேட்கிறார்கள். அந்த நேரத்தில் மக்கள் பெரும்பாலும் வேறு எதுவும் யோசிக்காமல் OTP கொடுத்துவிடுகிறார்கள். எனவே, OTP ஐ யாருடனும் பகிர வேண்டாம். யாராவது ஏதேனும் பின்னைக் கேட்டால், அந்த நபரின் அடையாளத்தைச் சரிபார்க்கவும். சில நேரங்களில் டெலிவரி நிறுவனங்களே டெலிவரிக்கு முன்பாக OTP அனுப்புகின்றன என்பதை நினைவில் கொள்ளவும்.

Follow Us:
Download App:
  • android
  • ios