new option available in whatsapp
உலக அளவில் வாட்ஸ்ஆப் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உடனடியான தகவல் பரிமாற்றத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது வாட்ஸ் ஆப் தான்.
அதிலும் பல சிறப்பு அம்சங்களை தொடர்ந்து வாட்ஸ்ஆப் கொடுத்து வருகிறது. அந்த வகையில் வீடியோ கால் முதல் வாய்ஸ் ரெகார்டிங், ஸ்டேட்டஸ் என அனைத்தும் உள்ளது
இதெல்லாம் ஒரு பக்கம் ஒரு கலக்கல் கலக்கி வரும் வாட்ஸ் ஆப் தற்போது மேலும் ஒரு சிறப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது வாட்ஸ் ஆப் பயன்பாட்டில் குரூப்பில் வந்த குறுச்செய்தி, வீடியோ, புகைப்படம், ஆடியோ என மெமரியை நிரப்பும் இல்லையா?அப்போது நமக்கு ஒரு தடுமாற்றம் இருக்கும் எத்தனை நீக்குவது ? எது முக்கியம்? எது முக்கியமான வீடியோ? எவ்வளவு மெமரி முடிந்துள்ளது ? இது போன்ற அனைத்து கேள்விக்கும் எளிதில் விடைகண்டு, நொடி பொழுதில் தேவையில்லாத ஆடியோ மற்றும் வீடியோ என அனைத்தையும் நீக்க முடியும். இந்த சிறப்பு வசதியை தற்போது வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வசதியை பெறுவதற்கு,வாட்ஸ் ஆப் அப்டேட் செய்ய வேண்டும் அவ்வளவு தான்..எனவே உடனே உங்கள் ஆன்ராய்ட் போனில் வாட்ஸ் ஆப் அப்டேட் செய்யுங்கள்..
