Russian Ukrainian War: ரஷ்யாவில் சேவைகள் நிறுத்தம் - டிக்டாக், நெட்ஃப்ளிக்ஸ் அதிரடி!
Russian Ukrainian War: போர் பற்றிய மக்கள் கருத்துக்களை மறைக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவில் நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் டிக்டாக் சேவைகள் அதிரடிாக நிறுத்தப்பட்டன.
நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் டிக்டாக் சேவைகள் ரஷ்யாவில் அதிரடிாக நிறுத்தப்பட்டன. உக்ரைன் மீதான போர் பற்றி மக்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை முடக்கும் ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களின் வியாபாரத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. மேலும் பல்வேறு அரசுகள் சார்பில் ரஷ்யாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆன்லைன் பொழுதுபோக்கு மற்றும் தகவல் துண்டிப்பு போன்ற நடவடிக்கை அந்த நாட்டை உலகின் மற்ற நாடுகளுடனான தொடர்பை மேலும் துண்டிக்கும்.
அமெரிக்க நாட்டு கிரெடிட் கார்டு சேவை வழங்கும் நிறுவனங்களான விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்டவை ரஷ்யாவில் தங்களின் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன. இதுதவிர தென்கொரிய நிறுவனமான சாம்சங் ரஷ்யாவுக்கு ஸ்மார்ட்போன் மற்றும் சாதனங்கள் ஏற்றுமதியை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. முன்னதாக ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், இண்டெல் மறஅறும் டெல் போன்ற நிறுவனங்களும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டன.
நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் தனது சேவைகளை நிறுத்துவது பற்றி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், கள நிலவரங்களை பிரதிபலிப்பதாக மட்டும் தெரிவித்தது. முன்னதாக ரஷ்யா நாட்டு டி.வி. சேனல்களை நெட்ஃப்ளிக்ஸ் ஒளிபரப்பு செய்யாது என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.
ரஷ்யாவில் உள்ள டிக்டாக் பயனர்கள் இனி புதிய வீடியோக்கள் மற்றும் நேரலைகளை மேற்கொள்ள முடியாது. மேலும் உலகின் எந்த பகுதிகளில் இருந்தும் பகிரப்படும் வீடியோக்களையும் பார்க்க முடியாது என டிக்டாக் தெரிவித்தது.