அடுத்த சில தினங்களில் அனைத்து ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் எங்கள் நிறுவனம் சார்பில் போர்ட்டல் எண் வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் அந்த போர்ட்டல் எண் மூலம் தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனவும் ஏர்செல் தென் மண்டல சிஇஓ சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார். 

செல்போன் டவர் சேவை வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாடகை பாக்கி தராததால் ஏர்செல்லின் சுமார் 8 ஆயிரம் டவர்கள் செயல் இழந்தன. இதனால் ஏர்செல் சேவை கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கியது. பின்னர் ஏர்செல் நிறுவனம் மேற்கொண்ட முயற்சியால் பெரு நகரங்களில் உள்ள 75% டவர்கள் தற்காலிகமாக செயல்படத் தொடங்கினாலும், பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண டவர் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால்,பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால் மீண்டும் செல்போன் டவர்கள் முடங்கும் வாய்ப்பு உள்ளதாக ஏர்செல் தென்மண்டல தலைவர் சங்கரநாராயணன் தெரிவித்திருந்தார். 

ஆனாலும் போர்ட்டல் எண் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் அவதி பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், விரைவில் அனைவருக்கும் போர்ட்டல் எண் வழங்கப்படும் எனவும் வாடிக்கையாளர்கள் அந்த போர்ட்டல் எண் மூலம் தங்களுக்கு வேண்டிய நிறுவனத்திற்கு மாறிக்கொள்ளலாம் எனவும் ஏர்செல் தென்மண்டல சிஇஓ சங்கர நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுவரை 25 லட்சம் வாடிக்கையாளர்கள் போர்ட்டல் எண் பெற்றுள்ளதாகவும் ஒன்றரை கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதால் அனைவருக்கும் ஒரே நாளில் போர்ட்டல் எண் வழங்க இயலாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.